#BREAKING : இந்திய முன்னாள் கால்பந்து வீரர் துளசிதாஸ் பலராம் காலமானார்..!!
ஒலிம்பியன் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முன்னாள் கால்பந்தாட்ட வீரர் துளசிதாஸ் பலராம் காலமானார்.
1956 -இல் நடந்த ஒலிம்பிக்கில் 4 வது இடம் பிடித்த இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்தவர்களில் பலாரமும் ஒருவர்.85 வயதான பலராம் வயது மூப்பின் காரணமாக பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொண்டு வந்த நிலையில், செவிலியர் ஒருவரின் மேற்பார்வையில் தன் வீட்டிலேயே அவர் சிகிச்சைப் பெற்று வந்தார்.இந்நிலையில் சற்று முன் அவர் காலமானார். இவரது மறைவிற்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.