மாரடோனாவின் பாரம்பரிய கைக்கடிகாரத்தை திருடிய அசாம் வாலிபர் ..!!

 | 

கால்பந்து ஜாம்பவான் டெய்கோ மாரடோனாவிற்கு சொந்தமான பாரம்பரிய கைக்கடிகாரம் ஒன்று துபாயில் உள்ள ஒரு விற்பனை நிலையத்தில் இருந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருட்டு போனது. மாரடோனாவின் கையெழுத்திடப்பட்ட இந்த கடிகாரம் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே அந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து துபாய் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கைக்கடிகாரத்தை இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாசித் ஹூசைன் என்ற நபர் திருடிச் சென்றதாக கண்டறிந்தனர். துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றி வந்த இவர், கடிகாரத்தை திருடிவிட்டு இந்தியாவிற்கு தப்பி ஓடிவிட்டதாக துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர்.

maradona-watch

இந்நிலையில் மத்திய புலனாய்வுத்துறை மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் அசாம் மாநிலம் சிவசாகர் பகுதியைச் சேர்ந்த வாசித் ஹூசைன், அசாம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP