1. Home
  2. விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ரவீந்திர ஜடேஜா திடீர் விலகல்..!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ரவீந்திர ஜடேஜா திடீர் விலகல்..!!

துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.முதல் 2 போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளதால், இந்த முறை கோப்பையை இந்தியா தான் வெல்லும் என ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி தரும் வகையில் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார். இதனை பிசிசிஐ-யே உறுதி செய்துள்ளது.

ரவீந்திர ஜடேஜாவுக்கு வலது காலின் மூட்டுப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. காயத்தின் தன்மை மிகவும் பெரிதாக இருப்பதால் அவரால் தொடர்ந்து விளையாட முடியாது என மருத்துவக்குழு கூறியுள்ளனர். ஜடேஜாவுக்கு மாற்று வீரராக சுழற்பந்துவீச்சாளர் அக்‌ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார். பேக் அப் வீரராக இருந்த அவரை உடனடியாக துபாய்க்கு அழைத்துள்ளனர்.


Trending News

Latest News

You May Like