1. Home
  2. விளையாட்டு

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலி ராஜினாமா..?


இந்திய கிரிக்கெட் அணி வாரியமான பிசிசிஐ அமைப்பின் தலைவராக சவுரவ் கங்குலி பணியாற்றி வருகிறார்.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்களில் சிறப்பான ஒருவராக கங்குலியும் மதிக்கப்படுகிறார்.

இந்நிலையில், பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ தலைவராக இருந்து வரும் கங்குலி தனது டுவிட்டர் பதிவில், 30 ஆண்டுகள் கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

1992 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய கிரிக்கெட் பயணம் 30 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். கிரிக்கெட் தனக்கு நிறைய கொடுத்திருப்பதாக கூறியுள்ள அவர், முக்கியமாக மக்கள் மற்றும் ரசிகர்களின் நம்பிக்கையை கொடுத்திருப்பதாக கூறியுள்ளார். இந்த பயணத்தில் தனக்கு உதவியாக இருந்தவர்கள், உதவியவர்கள், தோள் கொடுத்தவர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ள சவுரவ் கங்குலி, மக்களுக்கு நல்லது செய்யும் பணிகளில் களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த பயணத்துக்கும் தங்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

சவுரவ் கங்குலியின் இந்த பதிவால் அவர் பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து விலகக் கூடும் என்று பரவலாக பேசப்படுகிறது.

இதன்மூலம் கங்குலி விரைவில் அரசியலில் குதிக்கப்போவது உறுதியாகியுள்ளது. பாஜகவில் இணையப்போகிறாரா? அல்லது புதிய கட்சி தொடங்கப்போகிறாரா? என்பது மர்மமாக இருக்கிறது.

Trending News

Latest News

You May Like