1. Home
  2. விளையாட்டு

உலக சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட்..! ஒரே ஓவரில் 7 சிக்ஸ்..!!

உலக சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட்..! ஒரே ஓவரில் 7 சிக்ஸ்..!!

இந்தியாவில் தற்போது உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

உலக சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட்..! ஒரே ஓவரில் 7 சிக்ஸ்..!!

இந்த தொடரின் இன்றைய போட்டியில் உத்தரப் பிரதேசம் - மகாராஷ்டிரா அணிகள் மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் பி மைதானத்தில் நடந்தது.

அதன்படி மகாராஷ்டிரா அணி களமிறங்கியது. 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் குவித்தது. அதிக பட்சமாக அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட் 159 பந்தில் 220 ரன்கள் குவித்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இது அவரது முதல் இரட்டைச் சதம் ஆகும்.

இந்த போட்டியின் 49-வது ஓவரில் ஏழு சிக்ஸர்களை விளாசி யாரும் படைக்காத புதிய சாதனையை ருதுராஜ் படைத்தார். அந்த ஓவரை உத்தரப் பிரதேச அணியின் சிவா சிங் வீசினார். நோ பால் உள்பட 7 பந்துகளில் 43 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




Trending News

Latest News

You May Like