1. Home
  2. விளையாட்டு

மெஸ்ஸியின் மேஜிக் தொடருமா?...


அர்ஜென்டினாவின் ஒட்டுமொத்த நம்பிக்கையை தனது தோளில் சுமக்கும் 35 வயதான மெஸ்சிக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை போட்டியாகும்.

கேப்டன் லயோனல் மெஸ்சி (5 கோல்), இளம் புயல் ஜூலியன் அல்வாரஸ் (4 கோல்) கூட்டணி தான் அர்ஜென்டினாவின் ஆணிவேராக விளங்குகிறது. மெஸ்ஸியின் விளையாட்டு வாழ்க்கை முழுமை பெற வேண்டும் என்றால் அவர் உலகக் கோப்பையை வென்றாக வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




பந்தை துரிதமாக கடத்தி செல்வதிலும், லாவகமாக சகாக்களுக்கு தட்டிக்கொடுப்பதிலும் அற்புதமாக செயல்படும் மெஸ்சி, பந்துடன் வலையை நெருங்கினாலும் எல்லாநேரமும் அவரே கோலாக்க முயற்சிப்பதில்லை. எதிராளி தடுத்துவிடுவார் என்று உணர்ந்து விட்டால் கனநேரத்தில் அருகில் உள்ள சக வீரருக்கு பந்தை 'பாஸ்' செய்து விடுகிறார்.


குரோஷியாவுக்கு எதிரான அரைஇறுதியில் 3-வது கோல் அடிக்க மெஸ்சி பந்தை கொண்டு சென்ற விதமே அதற்கு உதாரணம். அர்ஜென்டினா நாட்டு கால்பந்தின் அடையாளமாக உள்ள டியாகோ மரடோனாவுடன் அடிக்கடி ஒப்பிடப்படும் மெஸ்சி, அதற்கு தான் பொருத்தமானவர் என்பதை நிரூபிக்க இதுவே கடைசி சந்தர்ப்பமாகும்.


மெஸ்ஸியின் மேஜிக் தொடருமா?...



1986-ம் ஆண்டில் மரடோனா தலைமையில் அர்ஜென்டினா மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் 'மேஜிக்' நிகழ்த்துவாரா? என்பது இன்றிரவு தெரிந்து விடும்.

newstm.in

Trending News

Latest News

You May Like