இனி காலண்டரைப் பார்க்காமலேயே ராகு காலம், எம கண்டம் சொல்ல முடியும்... எப்படி தெரியுமா ?
ஒவ்வொரு நாளுக்கும் உரிய ராகு காலம், எம கண்டத்தை எளிதாக அறிந்துகொள்ள சுலபமான வழிமுறை சொல்கிறது இந்த பதிவு.
கீழ்கண்ட வாக்கியத்தை முதலில் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும்.
திருநாள் சந்தடியில் வெயிலில் புறப்பட்டு விளையாடச் செல்வது ஞாயமா?'
இந்த வாக்கியம், ராகுகாலத்தினை அறிவதற்கானது. வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளில் முதல் எழுத்துகளை, கிழமைகளின் முதல் எழுத்தாக கொள்ளுங்கள்.
முதலில் திங்கட்கிழமையில் காலையில் 7.30 மணி முதல் 9 மணி வரை ராகுகாலம் அமையும். அதுமுதல் அடுத்தடுத்துள்ள நேரத்திற்கு உரிய தினம் எது என்று தெரியுமா?
திங்கள்:7.30-9.00; சனி:9.00-10.30; வெள்ளி: 10.30-12.00;
புதன்:12.00-1.30; வியாழன்:1.30-3.00;
செவ்வாய்: 3.00-4.30; ஞாயிறு: 4.30-6.00.
மேற்கண்டவாறு மனப்பாடம் செய்து கொண்டால் காலண்டரைப் பார்க்காமலே சட்டென்று ராகு காலம் சொல்லிவிடலாம்
அடுத்தது, எம கண்ட நேரங்களை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள,
விளையாட்டாய் புண்ணியம் செய்தாலும் திருவருளை ஞானமும் சத்தியமும் வெளிப்படுத்தும்
என்ற வாக்கியம் நமக்கு உதவும் .
எமகண்டம் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் 7.30 மணி வரை அமையும். இந்த வாக்கியத்தில் உள்ள முதல் எழுத்து வரிசைப்படி கிழமைகள் அடுத்தடுத்துவர, அடுத்தடுத்த 1.30 மணி நேரம் எமகண்டம்.
வியாழன்: 6.00-7.30; புதன்: 7.30-9.00;
செவ்வாய்: 9.00-10.30; திங்கள்: 10.30-12.00;
ஞாயிறு: 12.00-1.30; சனி: 1.30- 3.00; வெள்ளி: 3.00-4.30.
நமக்கு இனி ராகுகாலம், எமகண்டம் நேரங்கள் சொல்வது எளிதாகும்.