1. Home
  2. ஆன்மீகம்

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை அடிப்பது ஏன்? காரணம் இதோ..!

1

நம்மில் பலருக்கு காரணம் தெரியாமலேயே நிறைய பழக்கவழக்கங்களை பின்பற்றப்பட்டு வருகிறோம்.ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும். 

அதில் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள், மொட்டை போடுவது என்பது ஒன்று. பலரும் இது ஓர் குடும்ப வழக்கம், நேர்த்திக்கடன் என நினைத்து செய்து வருகின்றனர். ஆனால், இதற்கும் அறிவியல், மருத்துவ காரணம் உள்ளது. 

பிறக்கும் முன், தாயின் கர்பத்தில், 10 மாதம்  இருக்கிறோம். அப்போது,  இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் தான் எல்லா குழந்தைகளும் இருக்கும். 

சாதாரணமாக கடல் நீரில் கை விரல்களை, 5 நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை நன்கு துடைத்துவிட்டு பார்த்தால், விரல்களில் உப்பு இருக்கும். 5 நிமிடம் ஊற வைத்த கை விரல்களிலேயே, உப்பு இருக்கையில், 10 மாதம் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருந்த, குழந்தையின்  உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.

உடலினுள் சேரும் இந்த கழிவுகள், நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள், மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். ஆனால் அதற்கான வழிகள் குறைவு. அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர்.

மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். இப்படி உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்தி பின்பற்றமாட்டார்கள். எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் அது பரப்பப்பட்டது.

நம் மக்களிடையே அறிவியல் ரீதியாக சொல்வதை விட, ஆன்மீக ரீதியாக சொன்னால், கட்டாயம் செய்வார்கள் என்பதை, நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளனர்.
 

Trending News

Latest News

You May Like