1. Home
  2. ஆன்மீகம்

வரலட்சுமி விரதம் இருக்க முடியாவிட்டால் என்ன செய்வது..?

1

இன்று வரலட்சுமி விரதம் வரும் நாளில் மாதவிடாய் காலமாக இருக்கும். இன்னும் சிலருக்கும் வெளியூர் செல்வது போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால் பூஜை செய்து, வழிபட முடியாத நிலை இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் வரலட்சுமி விரதம் இருக்க முடியவில்லையே என வருத்தப்படலாம். ஆனால் கவலைப்படவேண்டியதில்லை. அதற்கும் வழி உள்ளது. ஆடிப்பெருக்கு அன்று தாலிக்கயிறு மாற்றிக் கொள்ள முடியாமல் போனவர்கள் வரலட்சுமி விரதம் அன்று தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளலாம்.

வருடந்தோறும் வரலட்சுமி விரதம் இருக்கும் வழக்கம் உள்ளவர்கள், இந்த ஆண்டு வீட்டில் உள்ள ஆண்கள் அல்லது வேறு யாரையாவது பூஜைகள் செய்யச் சொல்லலாம். நீங்கள் பூஜை அறைக்கு செல்லாமல் வெளியில் இருந்தே பிரார்த்தனை மட்டும் செய்து கொள்ளலாம். வீட்டில் வேறு யாரும் கிடையாது. தனியாக இருக்கிறோம். அல்லது வெளியூர் சென்று விட்டோர் என்பவர்கள் வரலட்சுமி விரதத்திற்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமையான ஆகஸ்ட் 23ம் தேதி, அதாவது ஆவணி 7 ம் தேதி வரலட்சுமி விரதத்தை கடைபிடித்து, பூஜை செய்யலாம். அன்றைய தினம் சுபமுகூர்த்தம் என்பதால் இந்த நாளில் வரலட்சுமி விரதத்தை செய்வதும் சிறப்பு.

Trending News

Latest News

You May Like