1. Home
  2. ஆன்மீகம்

இன்று சனிக்கிழமை...! இன்று அனுமனுக்கு இந்த பொருட்களை படைத்தால்...

1

அனுமனை மனதார வணங்கி வந்தால், வாழ்வில் உள்ள தடைகள், கவலைகள், வேதனைகள் நீங்கி, அனுமனின் அருளால் விரும்பிய பலன்கள் கிடைக்கும். ஜோதிட சாஸ்திரத்தில், ஒருவர் ராசிக்கேற்ப பொருட்களை அனுமனுக்கு படைத்தால், வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என கூறப்பட்டுள்ளது. இப்போது இதுக்குறித்து விரிவாக காண்போம்.

வெற்றிலையை ஆஞ்சநேயருக்கு படைத்து அர்ச்சனை செய்தால் அவரின் அருளை பெறமுடியும். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேற இந்த வெற்றிலை அர்ச்சனையை உடனே செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் மீதுள்ள சனியின் கோபமும் தீரும் என்று சொல்லப்படுகிறது.

அனுமனுக்கு தேங்காயை அர்ச்சனை செய்தால், எதிர்மறை சக்திகள் விலகி வீட்டில் மகிழ்ச்சி பொங்கும் என சொல்லப்படுகிறது. இந்த தேங்காயை சிவப்பு துணியில் கட்டு வீட்டு வாசலில் கட்டினாலும் தோஷங்கள் நீங்குமாம்.

அனுமன் கோயிலுக்கு செல்லும் போது வெல்லம் - கடலை பிரசாதம் வழங்கினால் அது உங்களுக்கு நன்மையை அளிக்குமாம். இதன் மூலம் அனுமன் மகிழ்ச்சியடைந்து உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பாராம்.

ஜோதிட சாஸ்திரப்படி கிராம்பு, ஏலக்காய் பிரசாதமாக கொடுப்பதன் மூலம் சனிதோஷம் குறையுமாம். அதுமட்டுமின்றி பச்சை எண்ணெய் விளக்கில் கிராம்புகளை வைத்து விளக்கேற்றி ஆரத்தி காட்டினால் கஷ்டங்கள் விலகுமாம்.

மேஷம்
அனுமனுக்கு உளுத்தால் தயாரிக்கப்பட்ட லட்டுகளை படைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

ரிஷபம்
துளசி விதைகளை அனுமனுக்கு படைத்து அர்ச்சனை செய்து வழிபடுங்கள். இதனால் அனுமனின் அருளைப் பெறலாம்.

மிதுனம்
நல்ல மணம் கொண்ட துளசி தைலத்தை அனுமனுக்கு படைத்து வணங்குவது நல்லது.

கடகம்
நெய் சேர்த்து உளுத்து புட்டு செய்து அனுமனுக்கு படைத்து வணங்குவதன் மூலம், வாழ்வில் உள்ள தொல்லைகள் நீங்கி, அனுமனின் ஆசியைப் பெறலாம்.

சிம்மம்
 சுத்தமான நெய்யால் தயாரிக்கப்பட்ட ஜிலேபியை அனுமனுக்கு படைத்து வணங்க வேண்டும்.

கன்னி
வெண்ணெயைப் படைத்து வணங்கினால்  விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

துலாம்
மோத்திச்சூர் லட்டு வாங்கி படைத்து வணங்கினால், உங்களுக்கு அனுமனின் ஆசி கிடைத்து, வாழ்வில் உள்ள இன்னல்கள் தீரும்.

விருச்சிகம்
உளுந்து லட்டுகளை அனுமன் ஜெயந்தி நாளில் படைத்து வணங்க வேண்டும். இதனால் நற்பலன்கள் கிடைக்கும்.

தனுசு
அனுமன் ஜெயந்தி நாளில் நீங்கள் அனுமனுக்கு துளசி விதைகளை மோத்திச்சூர் லட்டுகளின் மீது தூவி படைக்க வேண்டும்.

மகரம்
அனுமன் பிறந்த அனுமன் ஜெயந்தி நாளன்று மோத்திச்சூர் லட்டுகளை வழங்க வேண்டும். இதனால் வாழ்வில் நீங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

கும்பம்
அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனுக்கு செந்தூரம் பூசுவது நல்லது. இதனால் அவர் மகிழ்ந்து பரிபூர்ண அருளை வழங்குவார்.

மீனம்
அனுமனுக்கு கிராம்புகளைக் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். இதனால் கவலைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து அனுமனின் அருளால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

Trending News

Latest News

You May Like