1. Home
  2. ஆன்மீகம்

இன்று ஆடி பௌர்ணமி..! இன்று அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்த சாதம்

1

சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கக்கூடிய மாதம் ஆடி மாதம். ஆடி மாதம் இறைத்துவம் பொருந்திய மாதந்தகளில் ஒன்று. இறைவனை வழிபடுவதற்காகவே ஒதுக்கப்பட்ட மாதமாகவும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நம் முன்னோர்கள் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தான் ஆடி பெருக்கு என்ற தினத்தை வைத்து விவசாய தொழிலை தொடங்கினர்.

பௌர்ணமியில் பொதுவாக அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அம்மன் கோவில்களில் விளக்கு பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெறுகின்றன. பௌர்ணமி அன்று விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. ஆடி மாத பௌர்ணமி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் அம்பாள் படத்திற்கு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் காலை நேரத்தில் குளிக்காமல் அருகிலுள்ள அம்மன் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்மன் அல்லது அம்பாள் தெய்வங்களுக்கு சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த வஸ்திரம் சாற்றி, சிவப்புக்கல் ஆபரணம் அணிவித்து வழிபாடு செய்வது சிறந்தது. பல வகையான வாசம் மிக்க பூக்களால் அர்ச்சனை செய்வதோடு, அறுகம்புல்லாலும் அம்மனுக்கு அர்ச்சனை மிகவும் சிறப்பானதாகும்.

ஆடி பௌர்ணமி தினத்தன்று அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வழிபாடு செய்வது மிக அற்புதமான பலன்களை கொடுக்கும். பூஜையை முடித்த பின்பு நைவேத்தியப் பிரசாதத்தையும், தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றை கோயிலில் உள்ள பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும். இதுபோல வழிபட்டால் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் அறவே நீங்கி லாபங்கள் பெருகும். நோய்நொடிகள் ஏற்படாமல் காக்கும்.

ஆடி பவுர்ணமி நாளில் சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசி பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும். பொதுவாக பௌர்ணமியில் கிரிவலம் செய்வது சிறப்பானது. மலையினை சுற்றி வருவதால் மனத்திற்கு அமைதியும் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும்.

Trending News

Latest News

You May Like