1. Home
  2. ஆன்மீகம்

இன்று விரதம் இருந்து தெய்வங்களுக்கு பூஜை செய்து வழிபடுபவர்களுக்கு ஐஸ்வர்யங்கள் பெருகும்..!

1

ஆனி பௌர்ணமி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, தெய்வங்களை வழிபடுவதால் அந்த தெய்வத்தின் பரிபூரண ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும். குறிப்பாக ஆனி பௌர்ணமியில் கிருஷ்ண பகவானுக்கும், கற்புக்கரசியான சாவித்திரி தேவிக்கும் விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பானதாகும்.முன்னிரவு வேளையில் வானில் தோன்றும் சந்திர பகவானை தரிசித்து வழிபடுவது மிகவும் சிறந்தது. இந்த ஆனி பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம், சோளிங்கர், பழனி போன்ற மலை சார்ந்த கோயில்களில் இருக்கும் இறைவனை வழிபட்டு கிரிவலம் மேற்கொள்ளலாம்.

முகச் சவரம் செய்வது, முடி வெட்டுவது, மொட்டை போடுவது, நகம் வெட்டுவது போன்றவற்றை கட்டாயம் செய்யக்கூடாது. முடிந்தவரை சைவ உணவுகளை எடுத்துக் கொள்வது ரொம்பவே நல்லது.

பௌர்ணமி தினத்தன்று பிரபஞ்சத்தின் சக்தி அதிகரித்து காணப்படும். இந்நாளில் நாம் வேண்டும் வேண்டுதல்கள் அப்படியே பலிக்கும் என்கிற ஐதீகமும் உண்டு. அதனால் தான் பெரும்பாலான பரிகாரங்கள் பௌர்ணமி நாட்களில் செய்யப்படுகின்றன.

பௌர்ணமியில் கிரிவலம் வருவது ரொம்பவே விசேஷமானது. நிலவின் ஒளி நம் மீது பட நம் மனதில் இருக்கும் சஞ்சலங்கள் யாவும் தீரும். இந்நாளில் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது என்று கூறுவார்கள். பௌர்ணமியில் வீடு கட்டுவது, சுப காரியங்கள் செய்வது, வீடு புதுப்பிப்பது போன்றவற்றை செய்யலாம். மேலும் இந்நாட்களில் மௌன விரதம் மேற்கொள்வது ரொம்பவே நல்லது. தேவையற்ற அசுப வார்த்தைகளை பிரயோகிக்க கூடாது. இந்நாளில் சுப வார்த்தைகளை பிரயோகப்படுத்தி இறைவனை நினைத்து தியானம் மேற்கொண்டால் நாம் ஒரு வருடம் தவம் செய்வதற்கு சமமாகும்.

இந்நாளில் மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு மனம் மகிழ்ச்சியுடன் வருவதற்கு உரிய எல்லா ஏற்பாடுகளையும் நீங்கள் செய்யலாம். மகாலட்சுமியின் மனம் குளிர செய்ய அவளுக்கு பிடித்தமான இந்த ஒரு பொருளால் மாலையை கட்டி சாற்றுங்கள்.

நல்ல வாசத்திற்கு பெயர் போன மூலிகை பொருளாக இருக்கக்கூடிய ஏலக்காய் தான் அந்த பொருள் ஆகும். சமையலுக்கு பயன்படுத்தப்படும் இந்த ஏலக்காயை பயனுள்ள வகையில் மகாலட்சுமிக்கு மாலை போல மஞ்சள் நூலால் கோர்த்து சாற்றுங்கள். பின்னர் மகாலட்சுமிக்கு உரிய நைவேத்தியங்கள் படைத்து, இனிப்பு பண்டங்கள் வைத்து, குத்து விளக்கு இரண்டில் ஐந்து முகத்திலும் 5 திரி இட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். அதே போல என்னதான் குத்து விளக்கு, காமாட்சி அம்மன் விளக்கு போன்றவற்றை ஏற்றினாலும் பௌர்ணமி அன்று ஒரு அகல் விளக்காவது பூஜை அறையில் எரிய வேண்டும்.

அதே போல தலைவாசலிலும் இரண்டு அகல் விளக்குகளை இருபுறமும் வைத்து இரண்டு திரிகளை போட்டு தீபத்தை நேச்சுடர் ஆக எரிய விட வேண்டும். இதனால் குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் யாவும் நீங்கும். நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடக்கும். கடன் தொல்லைகள் தீரும் என்கிற ஐதீகம் உண்டு. மாலை ஆறு மணிக்கு மேல் யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. அதே போல கடன் நீங்க கடன் தொகையிலிருந்து ஒரு பகுதியை அன்றைய நாள் 6 மணிக்குள் கொடுத்து விட்டு வரலாம். இதனால் விரைவில் கடன் அடையும் என்கிற ஐதீகமும் உண்டு. 

ஆனி மாதம் பௌர்ணமி தினத்தில் விரதம் இருந்து தெய்வங்களுக்கு பூஜை செய்து வழிபடுபவர்களுக்கு ஐஸ்வர்யங்கள் பெருகும். பெண்களின் கணவர்களின் ஆயுள்பலம் கூடும். விரும்பிய நபரையே மணமுடிக்கும் அமைப்பு உண்டாகும். நீண்ட காலமாக புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். மாணவர்கள் விரும்பிய உயர் கல்வியை கற்கும் சூழல் ஏற்படும். கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீள்வார்கள். உணவு, உடை ஆகியவற்றிற்கு கஷ்டப்படும் நிலை ஏற்படாது.
இது போல எண்ணற்ற பலன்களை தரக்கூடிய ஆனி மாத பௌர்ணமியை தவற விட்டு விடாதீர்கள்.

Trending News

Latest News

You May Like