1. Home
  2. ஆன்மீகம்

ராகு, கேது தோஷ செய்பவர்களுக்கு இந்த தலம் சிறந்த பரிகாரத் தலம்..!

1

ஆன்மிக ஞானத்தையும் பெற தியானம் செய்யுங்கள் என்று சொல்கிறார்கள் சித்தர்களும், முனிகளும், ஞானி களும். அதிகாலை எழுந்து இறைவனை நினைத்து வழிபடும் தியானத்துக்கு ஆற்றல் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தியானம் செய்யலாம் ஆனால் தியானம் பழக்குவதற்கு மன அமைதிவேண்டுமே என்று நினைப்பவர்கள் முதலில் அத்ரி மலை சென்றுவாருங்கள். தியானம் கைகூடும். கிரக தோஷங்கள் நிவர்த்தி ஆகும். வாழ்வில் சந்தோஷம் அதிரிக்கும். எங்கே இருக்கிறது அத்ரி மலை.

பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் என்று சொல்வார்கள். சித்தர் களால் பெருமை பெற்ற மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதிதான் அத்ரி மலை என்று அழைக்கப்படுகிறது. அத்ரி மாமுனிவர் இங்கு அவருடைய சீடர்களுடன் வசித்த இடம் இது என்பதால் இம்மலை அத்ரி மலை என்றழைக்கப்படுகிறது. இந்த மலையில் அத்ரி முனிவர், கோரக்கர், பிருகு முனிவர் போன்ற சித்தர்கள் தவம்புரிந்து உள்ளார்கள். அகத்தியர் பொதிகை மலையில் இருந்துதான் தமிழ் வளர்த்ததாக கூறுகிறார்கள்.

சித்திர சிகண்டிகள் என்று அழைக்கப்படும் ஏழு ரிஷிகளில் ஒருவராக இருப்ப வர் அத்ரி. உலகுக்கு வேதமந்திரங்களை வழங்கிய ரிஷிகளில் இவருக்கு முக்கி யப் பங்குண்டு. ரிக், அஜூர், சாம, அதர்வண வேதமான நான்கில் ரிக் வேதத்தின் பல காண்டங்களை அத்ரிமக்ரிஷிதான் தபோவலிமையால் கொடுத்தார். இவர் ஜோதிடம், ஆயுர்வேதம் நூல்களையும் இயற்றியுள்ளார். அத்ரி மாமுனிவர் பதஞ்சலி மகரிஷிக்கு குருவாக இருந்து மானுட சரீர ரகசியங்களை கற்றுக் கொடுத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பா சமுத்திரத்திலிருந்து தென்காசி செல்லும் வழியில் கடனா அணையை அடைந்து அங்கிருந்து 7 கிமீட்டர் அடர்ந்த காடுகளுக்குள் பயணிக்க வேண்டும். போகும் போது அத்ரி கங்கா நதியை தாண்ட வேண்டும். வழியில் சித்தர்கள் வாழ்ந்த அடிச்சுவடு களைக் காணலாம். போகும் வழியில் இந்து அறநிலையத்துறையின் பராமரிப்பில் அனுசுயாதேவி, அத்ரி மகிரிஷி ஆசிரமம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோரக்க மகரிஷிக்காக அத்ரி மகரிஷி உருவாக்கிய கங்கா நதி இன்றளவும் தெளிந்த நீரோடையாக வற்றாத சுனையாக உள்ளது. அகத்தியர், கோரக்கர் இணைந்த கோயில் அமைந்திருக்கிறது. சித்தர்கள் தியானம் செய்த இந்த இடத்தில் அமர்ந்து கண் மூடி தியானம் செய்யும் போது மன அமைதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு செய்யும் சிவவழிபாடு விசேஷமிக்கது.

சித்தர்கள் வைத்து வழிபட்ட லிங்கத்தை ஆர்ஷலிங்கம் என்றழைக்கிறார்கள். அண்டம், அகிலங்களை தோற்றுவிக்கும் சப்தரிஷிகள் உருவாக் கிய லிங்கங்கள் சக்தி மிக்கவை. ஏனெனில் சிவலிங்கத்தை உருவாக்கிய சித்தர்கள் வழிபாடு, ஸ்தோத்ரம், பாராயணம், தரிசனம், அபிஷேகம் இப் படி பல விஷயங்களில் மனதையும் உடலையும் எம்பெருமானுக்கு அர்ப்பணித்து ஆன்மிக அன்பர்களையும் அதில் ஈடுபட செய்தவர்கள் இவர்கள்.

அத்ரி பரமேஸ்வரன் ஆலயத்தில் கருவறையில் மூலவராக அத்ரி பரமேஸ்வரன், அத்ரி பரமேஸ்வரி அருள்பாலிக்கிறார்கள். எதிரில் நந்திதேவர் அமைந்திருக்கிறார். இந்தக்கோவிலின் முன்புறம் வனதுர்க்கை, வள்ளி, தெய்வானை உடன் சுப்ரமணியார், பிள்ளையார், மகிஷாசுரமர்த்தினி, பிர காரத்தில் அகத்தியர், அத்ரி, நாகதேவதைகள் அமைந்திருக்கின்றன. விஷ்ணு, பிரம்மா, தட்சிணாமூர்த்தி மூவரும் கோஷ்டத்தில் அருள் பாலிக்கிறார்கள். அத்ரி கங்கை தீர்த்த இடத்தில் கங்காதேவி எதிரில் நந்தி சிலை அமைந்துள்ளது.
செவ்வாய் தோஷம் உடையவர்கள் சஷ்டியன்று விரதம் இருந்து இங்கிருக்கும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானை வழிபடுகிறார் கள். நாக தோஷம் உடையவர்கள் நாக தெய்வங்களை வணங்கினால் நாக தோஷம் நீங்கும். ராகு, கேது தோஷ பரிகாரம் செய்பவர்களுக்கு இந்த தலம் சிறந்த பரிகாரத்தலமாக இருக்கிறது. கிரக தோஷங்கள் எதுவாயினும் நிவர்த்தி ஆக அத்ரி மலை பரமேஸ்வரனை அபயமடையுங்கள். அருள் புரிவார்.
அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகவும், வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கவும் அத்ரி மலை தரிசனம் நிச்சயம் கைகொடுக்கும்.

Trending News

Latest News

You May Like