ஒரு நல்ல காரியத்திற்காக நாம் வெளியே செல்லும் முன் விநாயகர் படம் அல்லது சிலை முன்பு நின்று...

ஒரு நல்ல காரியத்திற்காக நாம் வெளியே செல்லும் முன் விநாயகர் படம் அல்லது சிலை முன்பு நின்று சாமியின் பாத்த்தில் 1 ரூபாய் நாணயம் வைத்து வழிபட்டு விட்டு சென்றால் அந்த காரியம் தடை ஏற்படாது.
1. நம் பூஜை அறையில் உள்ள விளக்குகளை ஒரு தட்டின் கீழ் தான் வைக்க வேண்டும். வெறும் விளக்கு மட்டும் வைப்பது தவறு.அந்த தட்டில் சிறிய அளவு பச்சரசி அல்லது ஒரு ரூபாய் நாணயம் வைத்து விளக்கை வைக்க வேண்டும்.
2. பஞ்சபாத்திரத்தை தினமும் அல்லது வாரத்தில் ஒரு முறையாவது கழுவி சுத்தம் செய்ய வேண்டும். அதில் நல்ல தண்ணீர் எடுத்துக்கொண்டு ஏலக்காய், பச்சை கற்பூரம் சிறிய அளவு மற்றும் துளசி இலை ஆகியவற்றை அத்துடன் சேர்க்க வேண்டும். நம் உள்ளங்கைகளைஅதன் மீது வைத்து மனதார நாம் நினைத்தை வேண்டிக்கொள்ள வேண்டும்.
3. பூஜை அறையில் இது சிறிய பாத்திரத்தில் ஏலக்காய் -3, கிரம்பு – 5, சோம்பு – சிறிதளவு மற்றும் பச்சை கற்புரம் சிறிதளவு இந்த நான்கு பொருட்களை வைக்க வேண்டும். இவைகள் மகாலெட்சுமி வாசம் செய்வதற்கான பொருட்கள் ஆகும். இது பூஜை அறையில் நன்கு வாசனை தரும்.
4. அண்ணபூரணி விக்கரகம் அனைவரின் வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டும். உணவுகளை வழங்கு தெய்வம் என்பதால் நம் வீட்டில் வைத்து கொள்வது நல்லது. அண்ணபூரணி விக்கரத்தை நாம் அந்த சிலையின் அகலத்திற்கு ஏற்றவாறு ஒரு தட்டை வைத்து அதில் அந்த சிலையின் அடிப்பகுதி வரை பச்சஅரிசி போட வேண்டும். இந்த பச்சரியை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அந்த அரிசியை நாம் தினமும் சமையிலில் சேர்க்கலாம் அல்லது சர்க்கரை பொங்கலை வைத்தும் சாப்பிடலாம். அதுவும் முடியவில்லை என்றால் குருவிகளுக்கு உணவாக வைக்கலாம். ஆனால் அந்த அரிசியை குப்பையில் போடக்கூடாது.
5. விளக்கு ஏற்றுவதற்கு முன் திரிகளில் உள்ள எண்ணெய்யை கைகளால் பிழிந்து விட்டு , அந்த எண்ணெய் பிசுக்குடன் கூடிய கைகயை துடைக்க அதற்கொண்று ஒரு துணி வைத்து கொள்ள வேண்டும் (அல்லது) கைகழுவிட்டு தான் விளக்கு ஏற்ற வேண்டும்.
6. விளக்கு குளிர்விக்கும் போது தூண்டு கோலினை கொண்டு விளக்கின் திரியை உட்புறமாக தள்ள வேண்டும். தள்ளும்போது லட்சுமி,துர்க்கை, சரஸ்வதி சங்கமம் என்று கூறி கொண்டு உட்புறமாக தள்ள வேண்டும்.இதை செல்வதற்கு காரணம் நம் விட்டிலேயே மகாலட்சுமி வசம் செய்ய வேண்டும் என்று அர்த்தம்.
7. திருநீற்று மற்றும் குங்கும்மத்தில் பூச்சுகள் மற்றும் வண்டுகள் வராமல் இருக்க அதில் சூடம் ஒன்றை வைத்தால் பூச்சுகள் மற்றும் வண்டுகள் வராமல் பாதுகாக்கும்.
பூஜையறையில் எப்பொழுதும் வாசனை தரக்கூடிய பூக்கள், ஊத்துபத்தி, சாம்பூரணி போன்றவை பயன்படுத்த வேண்டும்.வாசனை நிறைந்த இடங்களில் மகாலெட்சுமி வாசனை செய்கிறாள். சூடம் உள்ள டப்பாவில் நான்கு மிளகு போட்டு வைப்பதால் பூச்சுகள் மற்றும் சூடம் கரையாமல் இருக்கும்
பூஜை அறையில் இருக்க வேண்டிய பொருட்கள்
பஞ்சபாத்திரம்
தூபக்கால்
மணி
காமாட்சியம்மன் விளக்கு
தாம்பள தட்டு
திருநீர்
குங்கும்ம்
தூண்டுகோல்
அண்ணப்பூரணி
சூடம்
ஊதுபத்தி
சாம்பூராணி
கோமாதாயுடன் கூடிய கன்று
மற்றும் பல
முக்கிய குறிப்பு
v பால், தயிர், அரிசி, கல் உப்பு, கடுகு, பூ, நம் வீட்டில் எப்பொழுதும் நிறைந்து இருக்க வேண்டும். ஒரு குடத்தில் தண்ணரீ எப்பொழுதும் நிறைந்து இருக்கும்படி வைத்து கொள்ள வேண்டும். இவைகள் நிறைந்து இருந்தாலே நம் வீட்டில் மகாலட்சுமி வசம் செய்கிறாள் என்று நாம் அறிந்து கொள்ளலாம்.
v பணப்பெட்டியில் உள்ள பணத்தை செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் எடுக்க கூடாது. அதற்கு முதல் நாளே தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பேங்கில் தான் பணம் உள்ளது என்று ஏடிம்-ல் கூட பணம் எடுப்பதை இது போன்ற தினங்களில் தவிர்க்கலாம்.
v மாத சம்பளம் பெற்றவுடன் அந்த பணத்தில் முதலில் இனிப்பு வகைகள், 5 ரூபாய்க்கு சாக்லேட் மற்றும் வாசனை நிறைந்த பூக்களை இவற்றில் ஏதாவது ஒன்றையாவது வீட்டிற்கு வாங்கி செல்லுங்கள். இதனால் நாம் உழைத்த பணம் நமக்கு தேவையில்லாமல் பண விரயம் ஆகாமல் இருக்கும்
v வீட்டில் குப்பைகளை தினமும் வெளியே கொட்டி விடுங்கள்.