1. Home
  2. ஆன்மீகம்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது தோஷங்கள் நீங்க...

1

 தங்கள் வாழ்வில்  மேன்மையைப்  பெற தோஷங்களை நிவர்த்தி செய்ய மகம் நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய தலம்  அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வழியில் உள்ள விராலிப்பட்டியில் இத்தலம் அமைந்திருக்கிறது.

மூலவர் மகாலிங்கேஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவருக்கு வலதுபக்கத்தில் உள்ள சன்னிதியில் மரகதவல்லி, மாணிக்கவல்லி அம்பிகைகள் தெற்கு நோக்கி காட்சிதருகிறார்கள்.  கிரியாசக்தி, இச்சா சக்தி அளிக்கும் இந்த அம்பிகைகளை வணங்கினால் ஞான சக்தியைப் பெற்று இறைவனை அடையலாம்.

ஆனால் அம்பிக்கை மதில் ஓரத்தில் இருப்பதால் தாயாரை  சன்னிதிக்குள் எட்டிப்பார்த்துதான் வழிபடமுடியும். இத்தலத்தில் யோகிகளும் முனிவர்களும் அரூப வடிவில் சிவனை தினமும் பூஜிப்பதால் இவர்களுக்கு இடையூறு நேராமல் அம்பிகை சுவரை ஒட்டி இருப்பதாக  கூறப்படுகிறது.

இத்தலத்தின் சிறப்பு  சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் மீது மூலவர் மீது சூரிய ஒளி படுவது. காலையில் சிவன் மீது  விழும் சூரியனின்  ஒளிக்கதிர்கள் மாலையில் பைரவர் மீது விழுகிறது. இத்தலத்தில் ஒரே சன்னிதியில் இரண்டு அம்பிகைகளைத் தரிசிக்கலாம். 

சிவாலயங்களில் பொதுவாக வடகிழக்கு திசையில் அருள்பாலிக்கும் பைரவர் சிவனுக்கு எதிரில் காட்சி அளிக்கிறார். மகாலிங்கேஷ்வரர் உக்ரமானவர் என்பதோடு சக்தி மிக்கவர் என்பதால் பக்தர்களைத் தாக்காமல் இருக்க பைரவரை பிரதிஷ்டை செய்திருப்பதாக கூறுகிறார்கள்.

பைரவருக்கு பின்புறம்  தலைக்கு மேலே இருக்கும் துளையின் வழியாக  சிவனை பார்த்து பிறகு பைரவரை வணங்கி ஆலயத்துக்குள் செல்கிறார்கள்.

இராமர், சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய போது  ஆஞ்சநேயருடன் தேவகுருவின் புத்திரர் பரத்வாஜரைச் சந்தித்தார். அப்போது  தனக்கு உதவியாக இருந்த ஆஞ்சநேயரை கெளரவிக்கும் நோக்கில்  தனக்கு இலையில் உணவு பரிமாறிய போது… இலையின் நடுவில் கோடு போட்டு ஒரே இலையில் ஆஞ்சநேயரையும் உணவு உண்ணும்படி கூறினார்.

 அதனால்தான்  வாழை இலையில் நடுவில் கோடு வந்ததாகவும் சொல்வதுண்டு.  ஐந்துமுனிவர்கள் இணைந்து மதுரை மீனாட்சியை பிரதிஷ்டை செய்தார்கள். அவர்களுள் பரத்வாஜ முனிவரும் ஒருவர்.   பரத்வாஜர் இத்தலத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்டதாக இத்தலபுராணம் தெரிவிக்கிறது.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மகம் நட்சத்திரத்தின் இராசி : சிம்மம்

மகம் நட்சத்திரத்தின் அதிபதி : கேது

மகம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சூரியன்

மகம் நட்சத்திரத்தின் நட்சத்திர தேவதை : சுக்கிரன்

மகம் நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் : விநாயகர்

மகம் நட்சத்திரத்தின் நட்சத்திர குணம் : ராட்சஸ குணம்

மகம் நட்சத்திரத்தின் விருட்சம் : ஆலமரம்

மகம் நட்சத்திரத்தின் மிருகம் : ஆண் எலி

மகம் நட்சத்திரத்தின் பட்சி : கழுகு

மகம் நட்சத்திரத்தின் கோத்திரம் : ஆங்கிரஸர்

மகம் நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 10வது இடத்தை பிடிக்கிறது.

மகம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள் என்று பழமொழி உண்டு. பயணங்களில் விருப்பம் கொண்டவர்கள். சங்கீதம், பாடல் போன்ற கலைகளில் விருப்பம் உடையவர்கள். வாசனைப் பொருட்களில் விருப்பம் உடையவர்கள். நீதி நெறி தவறாமல் அற வழியில் நடப்பவர்கள். யாராவது தர்மத்திற்கு மீறிய செயல்களில் ஈடுபட்டாலும் அதை பொறுத்து கொண்டு போகும் குணம் இவர்களிடம் இருக்காது. அதனால் இயற்கையாகவே இவர்களுக்கு எதிரிகள் உருவாகிவிடுவார்கள்.

இவர்கள் சுகபோகமான வாழ்க்கை நடத்துவார்கள். இவர்களுக்கு வேலை செய்ய பல பணியாட்கள் இருப்பார்கள். மத சம்பந்தமான காரியங்களில் இவர்களுக்கு ஈடுபாடு இருக்கும். இவர்கள் மனைவியுடன் சுமுகமான உறவுகளை கொண்டிருப்பார்கள். இவர்கள் பெற்றோர்களிடம், கடமைப் பற்றுடன் நடந்து கொண்டாலும், எதிலும் கண்டிப்பாக இருக்கக்கூடிய சுபாவம், இவர்களிடம் காணப்படும். 25 வயதுக்குப் மேல் இவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.

இவர்களின் எண்ணமும் செயலும், தெளிவானதாய், திடமானதாக அமைந்திருக்கும். எந்த செயலில் ஈடுபட்டாலும் அதை திறம்படவும், விருப்பமுடனும் செய்து முடிப்பார்கள். மென்மையாக பேசுவார்கள். சிந்தித்து செயல்படும் மனப்பான்மை உள்ளவர்கள். கல்வி கற்பதில் விருப்பம் கொண்டவர்கள். வெளிப்படையாக பேசக்கூடியவர்கள். உத்தியோகத்தில் நேர்மையாக இருப்பதால் அதிக பணத்தை இவர்களால் தேட முடியாது. இருந்தாலும் கடின உழைப்பும், உண்மைக்கு உதாரணமாகவும் திகழ்வார்கள். ஒரு காரியத்தில் இவர்கள் முடிவெடுத்தால் அதிலிருந்து விலக மாட்டார்கள்.

இவர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். தங்களின் தனிபட்ட விஷயங்களில் மற்றவர்கள் தலையிடுவதை விரும்ப மாட்டார்கள். வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள். தான் செய்தது தவறு என மனதிற்கு பட்டால் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டார்கள். இவர்களின் வாழ்க்கையானது வெளி உலகுக்கு கௌரவமாக காட்சியளிக்கும். இவர்கள் நல்ல செல்வந்தராகவும், புத்திசாலியாகவும், பிறரிடம் கருணை காட்டி உதவி செய்பவராகவும் இருப்பார்கள்.

எப்பொழுதும் பம்பரம் போல் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு படிப்பறிவை விட அனுபவ அறிவு அதிகம். குடும்பத்தின் மேல் அதிக பாசம் கொண்டவர்கள். இவர்களிடம் நல்ல நிர்வாக திறமை இருக்கும். இவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை இருக்கும். பிரயனங்களில் அதிக விருப்பம் கொண்டவர்கள். மற்றவர்களை கௌரவமாக நடத்துவார்கள். இவர்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேச மாட்டார்கள்.

மகம் நட்சத்திரம் முதல் பாதம் :

இவர்களிடம் மகம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். இவர்கள் சிவந்த கண்களை கொண்டவர்கள். சிவந்த நிறம் உடையவர்கள். அறிவு நுட்பம் உடையவர்கள். பொருள் சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர்கள். எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். இவர்களுக்கு சொத்துக்கள் சேர்ப்பதில் விருப்பம் இருக்கும். பிறரை தான் பால் கவர்ந்து இழுக்கும் வசீகர தன்மை கொண்டவர்கள்.

மகம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் :

இவர்களிடம் மகம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். நற்குணங்களை உடையவர்கள். பணத்தை செலவழிப்பதில் விருப்பம் உள்ளவர்கள். அழகிய கண்களை உடையவர்கள். உடல் பலவீனம் உடையவர்கள். குடும்பத்தின் மேல் அதிக பாசம் கொண்டவர்கள். எப்பொழுதும் சிந்தித்து கொண்டே இருப்பார்கள். கலை துறையில் விருப்பம் கொண்டவர்கள். நண்பர்கள் மீது பற்று கொண்டவர்கள். இவர்களுக்கு இரக்கக் குணமும், பிறரை உதவும் தன்மையும் அதிகம் இருக்கும்.

மகம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் :

இவர்களிடம் மகம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். உடல் பலம் உடையவர்கள். இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்கும். கெட்ட செயல்களில் ஈடுபடமாட்டார்கள். அமைதியான போக்கை கொண்டவர்கள். பிடிவாதம் உடையவர்கள். எவருக்கும் அஞ்சதாவர்கள். செயல் தீரம் உடையவர்கள். பேராசை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சொன்ன சொல்லை காப்பாற்றுவார்கள். எடுத்த காரியத்தை முடிக்க எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டார்கள்.

மகம் நட்சத்திரம் நான்காம் பாதம் :

இவர்களிடம் மகம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும் சுயநலம் உடையவர்கள். பெண்கள் பேச்சை கேட்டு நடப்பவர்கள். முன் கோபம் உடையவர்கள். இவர்கள் இனிமையாக பேசுவதில் வல்லவர்கள். உதவி செய்தவர்களை எளிதில் மறந்து விடுவார்கள். ஆடம்பரமாக இருக்க ஆசைப்படுவார்கள். எதிலும் முதலில் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள்.

பரத்வாஜர் மகம் நட்சத்திரத்தை உடையவர் என்பதால் மாதந்தோறும் மகம் நட்சத்திரத்தன்றும், மாசி மகம் அன்றும்  இறைவனுக்கு  சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும் செய்யப்படுகிறது.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது தோஷங்கள் நீங்கவும்,   பிணிகள் அகலவும் சிவன் கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சிறப்பாக இருப்பார்கள். வீட்டில் வாஸ்து குறைபாடு இருப்பவர்கள் குறைகள் நீங்க சிறப்பு பூஜை செய்வது இங்கு விசேஷம்.

தாங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தன்று இத்தலத்து மகாலிங்கேஸ்வரரை வணங்கினால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்… 
 

Trending News

Latest News

You May Like