1. Home
  2. ஆன்மீகம்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும்...

1

பூசம் நட்சத்திரத்திற்குரிய தொழில் 

மிக கடுமையான பிரச்சனைகளுக்கு கூட எளிதாக தீர்வு காணக் கூடிய பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்ற தொழில் பற்றி இங்கு காண்போம். சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி பூசம் நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள். 

  • பால் சார்ந்த தொழில் (பால் பண்ணை,டீ கடை, பால்கோவா, பால் சார்ந்த பலகாரங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை).
  • அறுவை சிகிச்சை மருத்துவர்.
  • அரிசி, கோதுமை வியாபாரம், பலசரக்கு வியாபாரம்.
  • எண்ணெய் விற்பனை
  • இரும்பு விற்பனை அல்லது பழைய இரும்பு கடைகள்.
  • பழைய வாகனங்கள் விற்பனை
  • அரசியல்
  • ஆசிரியர்கள், ஆன்மீக குருமார்கள்.
  • உளவியலாளர்கள் 
  • ரியல் எஸ்டேட் முகவர்கள்.
  • தொண்டு நிறுவனங்கள் 
  • குழந்தைகள் நல மருத்துவர்கள்
  • பாரம்பரிய உணவு விற்பனை அல்லது பாரம்பரிய மருந்து விற்பனை.
  • கைவினைக் கலைஞர்கள்.

ஆயில்யம் நட்சத்திரத்திற்குரிய தொழில்

எதற்கும் துணிந்த ஆயில்யம் நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி இங்கு காண்போம்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி ஆயில்யம் நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள். 

  • வணிகம் 
  • ஆயுர்வேத மருத்துவர்.
  • மெடிக்கல், மருந்து பொருட்கள் விற்பனை,மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை சார்ந்த வேலை‌
  • இரசாயன பொறியாளர்கள்
  • வக்கீல், வழக்கறிஞர்களுக்கான புத்தகம் விற்பனை.
  • யோகா ஆசிரியர்கள்
  • செல்லப்பிராணி விற்பனை.
  • மனநல மருத்துவர்
  • இ-சேவை மையம்
  • அடகு கடை
  • பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை 
  • கப்பல் தொழில்நுட்பம்
  • விண்வெளி மற்றும் கடல் ஆராய்ச்சி
  • மீனவர்கள்

மகம் நட்சத்திரத்திற்குரிய தொழில் 

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் சொந்த தொழில் செய்வதையே விரும்புவார்கள்.மகம் நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி இங்கு காண்போம்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி மகம் நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள். 

  • நிர்வாகிகள், மேலாளர்
  • வணிகம் (முக்கிய இடங்களில் இவர்கள் கடைகள் அமைந்திருப்பார்கள்)
  • சிறந்த ஜோதிடர்
  • இராணுவம்
  • பெரிய நகரங்களில் வர்த்தகம்
  • தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்
  • பரம்பரை பரம்பரையாக செய்த தொழில்
  • வரலாற்று ஆசிரியர்கள்
  • நீதிபதிகள்
  • நடுவர்கள் (கிரிக்கெட், கால்பந்து மற்றும் இதர விளையாட்டு போட்டிகளில் உள்ள நடுவர்கள்)
  • நூல் பதிப்பகம்
  • ஆன்மீக நூல்கள் மொழிபெயர்ப்பு
  • ஒரு நாட்டின் ஜனாதிபதி
  • மின்னணு பொருட்கள் விற்பனை 
  • இராணுவ சேவைகள் 

பூரம் நட்சத்திரத்திற்குரிய தொழில்

படைப்புத் திறன் மிக்க பூரம் நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி இங்கு காண்போம்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி பூரம் நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள். 

  • சினிமா, பொழுதுபோக்கு கலைஞர்கள்
  • அழகு கலைஞர்கள்
  • எண்ணெய் விற்பனை, ஜவுளி விற்பனை
  • சுற்றுலா தொழில்
  • திருமண விழாக்களுக்கு தேவையான பொருட்கள் விற்பனை அல்லது திருமண மண்டபம், கேட்டரிங், ரேடியோ செட், மேடை அலங்காரம் போன்ற தொழில் செய்தல்
  • கழிவறை சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை. (கழிவறை சம்பந்தப்பட்ட டைல்ஸ், செப்டிக் டேங்க் கிளினிங், கழிவறை நறுமணமூட்டி )
  • ரோஜாப்பூ விற்பனை
  • பருத்தி மற்றும் பட்டு விற்பனை
  • கம்பளி விற்பனை 
  • நறுமணப் பொருட்கள் விற்பனை
  • திரையரங்கு 
  • ஊடக பிரபலங்கள் (ஊடகங்களில் கமென்ட்ரி, விவாதம் செய்பவர்கள்,செய்தி வாசிப்பாளர்)
  • நகை செய்பவர்கள் மற்றும் நகை வியாபாரிகள்.

உத்திரம் நட்சத்திரத்திற்குரிய தொழில்

எதிலும் தனித்துவமாக நிகழக்கூடிய மற்றும் பகுத்தறிவு மிக்க உத்திரம் நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி இங்கு காண்போம்‌.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி உத்திரம் நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள். 

  • இந்திய ஆட்சிப் பணி
  • மேலாளர்கள்
  • ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை
  • கோவில் தலைமை அர்ச்சகர், சர்ச் பாதிரியார், மசூதி மௌலானாக்கள் மற்றும் இதர மதங்களில் உள்ள தலைமை பூசாரி அல்லது போதகர்கள்.
  • ஆசிரியர்கள் 
  • அனைத்து துறைகளிலும் தொழில் முறை ஆலோசகர்கள்
  • செவிலியர்கள்
  • சுகாதார பராமரிப்பாளர்
  • கவுன்சிலர்கள்
  • விலங்குகளுடன் பணிபுரிபவர்கள் (வனத்துறை, வனவிலங்கு காப்பகம், பறவைகள் சரணாலயம் போன்றவற்றில் பணி)
  • இதய மருத்துவர்கள்
  • ஊட்டச்சத்து நிபுணர்கள்
  • சமையல்காரர்
  • விமானப் பணிப்பெண்கள்
  • தானியம் வியாபாரம்
  • பால் விவியாபாரம்

அஸ்தம் நட்சத்திரத்திற்குரிய தொழில்

எடுத்துக் காரியங்களை முடிக்க நினைக்கும் அஸ்தம் நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி இங்கு காண்போம்.

சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி அஸ்தம் நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள். 

  • ஆடிட்டர்
  • டீலர் 
  • பில்டர்
  • தினசரி பயன்பாட்டு பொருட்கள் விற்பனை (காய்கறிகள்,மளிகை சாமான்)
  • கமிஷன் ஏஜன்ட்
  • நோட்புக் விற்பனை
  • காகிதத் தொழிற்சாலை
  • பதிப்பகம் மற்றும் அச்சிடுதல் சம்பந்தப்பட்ட துறை
  • பேக்கேஜிங் தொழில்
  • பொம்மை தயாரிப்பாளர்கள்
  • தச்சர்கள்
  • ஜோதிடர்கள், கைரேகை நிபுணர்கள்
  • நகைச்சுவை நடிகர்கள்
  • வர்ணனையாளர் 
  • மந்திரவாதிகள்
  • கைவினைக் கலைஞர்கள்
  • நகைச்சுவை நடிகர்கள் 
  • தட்டச்சு செய்பவர்கள்
  • கணக்காளர்கள் 
  • பூங்கா பராமரிப்பாளர்

சித்திரை நட்சத்திரத்திற்குரிய தொழில்

எதையும் உருவாக்க கூடிய சித்திரை நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி இங்கு காண்போம்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி சித்திரை நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள். 

  • கட்டிடக் கலைஞர்கள்
  • சிற்பிகள்
  • ஜவுளிக்கடை
  • விவசாயம்
  • ஆடை வடிவமைப்பாளர்
  • இயந்திர பாகங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை
  • சிறை அதிகாரி
  • வழக்கறிஞர்கள்
  • பாடகர், இசையமைப்பாளர்
  • ஓவியர்கள்
  • திரைக்கதை எழுத்தாளர்
  • நகைக்கடை தொழில் (நகைக்கடையில் வேலை பார்ப்பவர்களையும் குறிக்கும்)
  • விளம்பரத் தொழில்
  • மார்கெட்டிங் வேலைகள் 
  • கிராஃபிக்ஸ் கலைஞர்கள்
  • வாஸ்து நிபுணர்கள்
  • சொற்பொழிவாளர்
  • பொது மருத்துவர்கள்

Trending News

Latest News

You May Like