1. Home
  2. ஆன்மீகம்

ஒரு நாள் நந்தி பகவானுக்கு தன் மீதும் தன் சிவ பக்தியின் மீதும் அதிக கர்வம் ஏற்பட்டது..!

1

ஒரு நாள் நந்தி பகவானுக்கு தன் மீதும் தன் சிவ பக்தியின் மீதும் அதிக கர்வம் ஏற்பட்டது. உலகத்திற்கே படியளக்கும் எம்பெருமானுக்கு இது தெரியாதா என்ன. நந்தியின் கர்வத்தை அடக்க நினைத்த ஈசனும், நந்தியின் மேல் அமர்ந்தபடி  ஒரு முறை பூமியை வலம் வந்தார். அவரைச் சுமந்து சென்ற நந்தீஸ்வரர்க்கு மூன்று லோகங்களையும் தாங்குகின்ற இறைவனையே  நான் தாங்குகிறேன். ஆகா! என்னே என் திறமை? என்ற எண்ணத்துடன் நந்தி இறைவனைச் சுமர்ந்து வந்தார். இறை தொண்டு செய்கின்றவர்களுக்கு இந்த மாதிரி எண்ணம் வந்தால் அது பாபம் என்று நம்  சாஸ்திரங்கள் கூறுகின்றன.

நந்தியின்  கர்வத்தை அடக்கும் நேரமும் வந்தது. இறைவன் தன் ஜடா பாரத்திலிருந்து ஒரு முடியை எடுத்து தாம் அமர்ந்திருந்த நந்தி முதுகில் வைத்துவிட்டு இறங்கிக் கொண்டார்.

அந்த பாரத்தைத் தாங்க முடியாமல் நான்கு கால்களும் பின்னலடைய நந்தி அப்படியே நாக்குத் தள்ளியபடியே நின்றுவிட்டார். மொத்த சடாமுடியும் சுமக்கும் போது பாரம் இல்லை. ஏனென்றால் இறைவன் அப்போது நந்தியுடன் இருந்தார். ஆனால் ஆணவம் உண்டாகி, இறைவனை விட்டு பிரிந்த போது ஒரு முடியின்  பாரம் கூட  தாங்க முடியவில்லை.

தனது வல்லமையின் மீது கர்வம் கொண்டிருந்த நந்தீஸ்வரரும் தனது தவறை உணர்ந்து கர்வம் நீங்கினார். அவனன்றி இவ்வுலகில் எது அசையும்!

Trending News

Latest News

You May Like