1. Home
  2. ஆன்மீகம்

லட்சுமியுடன் கூடிய நாராயணனின் படம் வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும்..! ஏன் தெரியுமா ?

1

குலம் தழைக்கச் செய்யும் குலதெய்வ வழிபாடு முக்கியம் என்பதால், வீட்டு பூஜையறையில் அவசியம் குலதெய்வ படம் இருத்தல் வேண்டும். குல தெய்வத்திற்கு அடுத்தபடியாக நம் மனதிற்கு நெருக்கமான இஷ்ட தெய்வத்தின் படத்தை வைக்கலாம்.

அடுத்த நிலையில் விக்கினங்களை, நீக்கி வினைகளை களைபவரான விநாயகரின்  படத்தினை வைத்து வணங்கி வரலாம். காரியசித்தி உண்டாக்கும். கணபதியை தொழுவதினால், தடைகள் நீங்கி ஏற்றம் பெறலாம்.

அண்ணன் இருக்குமிடத்தில் தம்பியும் இருந்தால் தானே சிறப்பு. அரசாங்க வேலைக்கு முயற்சிப்பவர்களும், அரசியலில் சாதிக்க முன்னேற துடிப்பவர்களும் ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். திருமண கைகூட ,மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படம் பலன் தரும்.

திருமணம் ஆனவர்கள், தங்கள் துணையுடன் என்றும் பிரியாமல் இணக்கமாக வாழ, அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம். ராதையுடன் இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்குவதால், அன்பு, பாசம், காதல், நேசம் ஆகியவை வரமாக கிடைக்கும்.

குடும்ப ஒற்றுமைக்கு சிவபெருமானின் படம் வைத்து வணங்கி வரும் அதே நேரம், ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படம் ஏற்றது.

சொர்ணதாதேவியை தன் மடியில் அமர்த்தி அணைத்தவாறு அருள்பாலிக்கும் சொர்ணபைரவரின் படம் வைத்து வணங்கும் போது அனைத்து நலன்களும் கை வரப் பெறலாம். சிறப்பானதே.  பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை தரும் வரப்ரசாதி என்றாலும் அவரின் தலைவன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.

திருமகளின் அருளுடன், 16 வகை பேறுகளும் கிடைக்க லட்சுமியுடன் கூடிய நாராயணனின் படம் சிறந்தது.

ஞானத்தினை போதிக்கும் தட்சணாமூர்த்தியின் படம் வீட்டில் அவசியம் இருத்தல் நன்று. கல்வி ஞானம், அறிவும், ஞாபக சக்தி,செல்வம், வீரம் இவையனைத்தும் கிடைக்கும். கலைமகளின் படத்தை வணங்குவதால் பேச்சுத்திறமையும், எழுத்துத்திறமையும் உண்டாகும். குருவருள் கிடைக்க சித்தர்கள், மகான்கள், முனிவர்கள், யோகிகள், ரிஷிகள் இவர்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். 

குபேரனுக்கு அருள் பாலிக்கும் லட்சுமியின்  படம் இருக்கும் வீட்டில் செல்வத்திற்கு குறைவிருக்காது. அலர்மேல்மங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைப்பதால், தொழில் விருத்தி மற்றும் சுகமான வாழ்க்கையும் அமையும். 

எந்த வீட்டில் அன்னபூரணியின் படம் வைக்கப்பட்டு வணங்கப்படுகிறதோ, அங்கு பசி, பட்டினி, பஞ்சம் தீரும்.

தெய்வங்களை சரணடைவோம்... வாழ்வில் நலன்களை பெறுவோம்!

Trending News

Latest News

You May Like