1. Home
  2. ஆன்மீகம்

இதை தெரிஞ்சிக்கோங்க..! கேட்டதை கேட்டபடி அருளும் பிரபஞ்ச மந்திரம்..!

1

ஆன்மீக ரீதியாக நாம் செய்யக்கூடிய எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அது பிரபஞ்சத்தோடு தொடர்புடையதாக தான் திகழ்கிறது. மேலும் பிரபஞ்சத்துடன் நாம் நேரடியாக தொடர்புகொள்ள பல தியான முறைகள் இருக்கின்றன. அது மட்டும் அல்லாமல் ஆன்மீக ரீதியாக கூறும் பிரம்ம முகூர்த்தம் என்பதும் பிரபஞ்சத்துடன் தொடர்புடையதாக தான் திகழ்கிறது.

பிரபஞ்சத்தை நாம் முழுமையாக நம்பி அதனிடம் எதைக் கேட்டாலும் அது நமக்கு வாரி வழங்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அப்படி வாரி வழங்கக்கூடிய பிரபஞ்சத்திடம் நாம் எந்த முறையில் அணுக வேண்டும் என்ற பார்போம். நாம் பிறந்த கிழமை அன்று விடியற்காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் ஒரு விளக்காவது ஏற்றி வைக்க வேண்டும். சுவாமி படத்திற்கு முன்பாக ஒரு ரூபாய் நாணயத்தை குருதட்சணையாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு தரை விரிப்பை விரித்து அதன் மேல் கிழக்கு முகமாக பார்த்து அமர வேண்டும்.

அவ்வாறு அமரும் பொழுது பத்மாசனத்தில் அமர்வது மிகவும் நன்மை பயக்கும். முடியாதவர்கள் சாதாரணமாக சமணம் போட்டும் அமரலாம். அடுத்ததாக நம்முடைய இரண்டு கைகளையும் சின் முத்திரையில் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு கண்களை மூடி அமைதியான முறையில் விநாயகரையும், குலதெய்வத்தையும் வழிபட்டு விட்டு “ஓம் சிவ சிவ ஓம்” என்னும் மந்திரத்தை நம்மால் இயன்ற அளவு எத்தனை முறை உச்சரிக்க முடியுமோ அத்தனை முறை உச்சரிக்க வேண்டும்.

இவ்வாறு நாம் தினமும் இந்த மந்திரத்தை கூறி முடித்து விட்ட பிறகு நமக்கு என்ன தேவையோ அதை இந்த பிரபஞ்சத்திடம் கூற வேண்டும். அவ்வாறு நாம் தொடர்ந்து எந்த கோரிக்கையை வைக்கிறோமோ அந்தக் கோரிக்கை விரைவில் நடப்பதற்கு நமக்கு என்ன ஆற்றல் தேவையோ அந்த ஆற்றலை பிரபஞ்சம் நமக்கு வழங்கும். பூஜையறையில் தினமும் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து வைத்துவிட்டு பிறகு தான் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த ஒரு ரூபாய் என்பது குரு தட்சணையாக கருதப்படுகிறது. குருவிற்கு தட்சனை கொடுக்காமல் நாம் சொல்லும் எந்த மந்திரமும் விரைவில் பலன் அளிக்காது. ஒரு மாதம் முடிந்த பிறகு அல்லது நம்முடைய கோரிக்கை நிறைவேறிய பிறகு இந்த ஒரு ரூபாய் நாணயங்கள் அனைத்தையும் எடுத்து அருகில் இருக்கும் பழமையான ஆலயங்களில் எந்த தெய்வத்தை குருவாக நீங்கள் நினைத்தீர்களோ அந்த தெய்வத்திற்கு சேர்த்து விட வேண்டும்.

இந்த ஒரு வரி மந்திரத்தை நாம் தினமும் உச்சரித்து நம்முடைய வேண்டுதல் அனைத்தையும் இந்த பிரபஞ்சத்திடம் கேட்டு பூர்த்தி செய்து கொள்வோம்.

Trending News

Latest News

You May Like