இதை தெரிஞ்சிக்கோங்க..! கோவில் சிலைகளுக்கு எதிரே நின்று சாமி கும்பிடுவது தவறா?

கோவிலில் ஒரு தனித்துவமான சக்தி மூலஸ்தானத்தில் வேத மந்திரங்கள் ஓதப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே. அத்தகைய மந்திரங்கள் மூலஸ்தானத்தில் பெரும் சக்திகளை சேமிக்கிறது.
கோவிலில் மந்திர சக்தியும், இயந்திர சக்தியும் உள்ளது. பிராண பிரதிஷ்டையின் போது சுவாமியின் சக்தியை நம்மால் தாங்க முடியாது.
எனவே கடவுள் எதிர் நிற்க வேண்டாம் என்கிறார்கள். குறிப்பாக சிவபெருமான் மற்றும் காளி அன்னை கோவில்களில் கவனமாக இருக்கவும்.எனவே முதலில் சிவனை நந்தி கொம்புகள் நடுவில் இருந்து நேராக பார்த்து தரிசனம் செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
அப்படி இருந்தும் நாம் இடையூறாக இருக்கக் கூடாது என்று முன்னோர்கள் கூறினார். எனவே சுவாமியின் எதிர் நோக்கி நின்றுதரிசனம் செய்யக்கூடாது என்பது ஐதீகம். வழக்கம்போல் சுவாமிக்கு வலப்புறமும் இடப்புறமும் நின்று தரிசித்து அவரது அருளைப் பெற்று வாருங்கள்.