1. Home
  2. ஆன்மீகம்

நாம் கடவுளை மற்றும் ஆசானை வணங்குவோம்... நான் சரியாகத்தான் வணங்குறோமா ?

1

தலைமேல் கைகளைக் குவித்துப் பிற தெய்வங்களை வணங்க வேண்டும்.

நெற்றிக்கு நேராகக் கைகளைக் கூப்பியபடி அறிவு புகட்டிய ஆசானை வணங்க வேண்டும்.

வாய்க்கு நேராகக் கரங்களைக் கூப்பியவாறு தந்தை, அறவோர், அமைச்சர், அரசர் ஆகியோரை வணங்க வேண்டும்.

குவித்த கைகளை வயிற்றில் வைத்து பெற்ற தாயை வணங்க வேண்டும்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளை வணங்கும் போது, சிரசின் மேல் 12 அங்குலம் கைகளை உயர்த்தி வணங்க வேண்டும். மற்ற தெய்வங்களை சிரசின் மேல் கைகளைக் குவித்து வணங்கினாலே போதுமானது.

மாதா, பிதா, குரு தெய்வங்களை வணங்கும் போது, ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். அதாவது பூமியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குதல் முறையாகும். அதே போல் பெண்கள் மேற்கண்டவர்களை வணங்கும்போது பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். 

Trending News

Latest News

You May Like