இதை தெரிஞ்சிக்கோங்க : மகாலஷ்மி மனநிறைவோடு வீட்டிற்கு வர இதை செய்தால் போதும்..!

வாரம் ஒரு நாள் இறைவனை வழிபட என்று ஒதுக்கியிருப்பது வெள்ளிக்கிழமை என்றாலும் அனுதினமும் காலை பூஜையறையில் விளக்கேற்ற வேண்டும். ஐந்து நிமிடங்கள் ஒதுக்கி குலதெய்வத்தை வணங்கி பிறகு இஷ்ட தெய்வத்தை மனமாற பூஜித்து சில நிமிடங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும். இப்படிதான் நம் முன்னோர்கள் காலங்காலமாக இறைவனை வழிபட்டு வந்தார்கள்.
இன்று இந்த முறையில் நேரமின்மையால் அதிகளவு மாற்றங்களை சந்தித்துவருகிறோம். இதனால் மனதில் அமைதி என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதைதொடர்ந்து செய்யும் செயல்கள் பதறி சிதறுகிறது. அதை தொடர்ந்து மன உளைச்சல், பரபரப்பு, டென்ஷன் இப்படி தொடங்கி நோயில் வந்து முடிகிறது.
தினமும் பூஜையறையை சுத்தம் செய்வது இயலாத காரியம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படி எல்லோர் வீட்டிலும் பூஜையறைக்கு தனி இடம் தனி அலமாரி என்று ஒதுக்கி வைப்பதிலும் பெரும்பாலும் இடப்பற்றாக்குறை ஏற்படவே செய்கிறது. மகாலஷ்மியை ஆத்மார்த்தமாக வணங்க தனியாக கால நேரம் ஒதுக்க வேண்டாம். தினமும் அதிகாலை எழும்போது ஒரு பத்து நிமிடங்கள் போதும். அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை எவ்வித தோஷமுமில்லாத காலம் என்கிறது இந்து மதம். பிரம்ம முகூர்த்தம் என்று இதை சொல்கிறோம்.
இந்த காலத்தில் வீட்டு வெளி வாசலில் இரண்டு மண் அகல் விளக்குகளில் இரண்டு திரிகள் போட்டு விளக்கேற்றுங்கள். பிறகு தூங்க கூடாது. வீட்டு விலக்கு நாட்கள் தவிர மற்ற நாட்களில் குளிக்காமல் பல் தேய்த்து முகம் கழுவி ஏற்றி வைத்தாலே போதுமானது. அதே போன்று மாலையில் அரைமணி நேரமாவது விளக்கேற்றி வையுங்கள். இந்த நேரத்தில் மனதில் எந்தவிதமான சத்தங்களையும் அனுமதிக்காமல் மனதை அமைதியாக வைத்திருங்கள். மஹாலஷ்மி மகிழ்ந்து உங்களுடன் வசிக்க தொடங்குவாள். தொடர்ந்து 7 நாட்கள் ஏற்றினாலே மன அமைதியும், ஆன்மிக உணர்வும் கிடைப்பதை உணர்வீர்கள்.
இந்த ஐந்து நிமிட மெளனமான இறைவனின் பூஜையில் மனதை அடக்கி ஆளும் சூட்சுமத்தை கண்டறிந்ததால் தான் இதை ஆன்மிகத்தில் புகுத்தினார்கள் முன்னோர்கள். இப்போதுபுரிகிறதா?