1. Home
  2. ஆன்மீகம்

காஞ்சி மகானின் கருணையே கருணை ..!

1

ஆன்மீக குரு என்றவுடன் நம் அனைவரின் மனக்கண் முன்னும் தோன்றுவது காஞ்சி பரமாச்சாரியாரின் திருவுருவம் தான்.  

காஞ்சி மகாபெரியவா, தனது அடியார்கள் மீது கருணை மழை பொழிவதில் நிகரற்றவர். பக்தர்கள் வாழ்வில் மகான்  செய்த அற்புதங்கள் கணக்கிலடங்கா.

 பழையனூர் என்ற ஊர்ல மகாபெரியவாளோட பக்தர் ஒருவர் மாசத்துக்கு ஒருதரமாவது பெரியவாளை தரிசனம் பண்ண வந்துவிடுவார். சொந்த ஊரில் வேலை பார்த்த அவரை சென்னைக்குப் பக்கத்தில் வேலை மாற்றல் ஆனது.

பட்டணம் வந்ததும் வாங்கின சம்பளத்துல செலவெல்லாம்போக மிச்சம் பார்த்த அவருக்கு இங்கே கைக்கு வாங்கறது வாய்க்கும் வயத்துக்குமே சரியா இருந்தது.மாசத்துக்கு ஒருதரம் பெரியவாளை தரிசனம் பண்ணினவர்ஆறேழு மாசத்துக்கு ஒருதரம்கூட வரமுடியவில்லை.

 ஒருநாள் காதுல போட்டுண்டு இருந்த கடுக்கனையும்கழட்டி விற்கிற நிலைமை வந்தபோது ரொம்பவே மனம் உடைந்து, பரமாசார்யா படத்துக்கு முன்னால நின்னு, "இப்படி ஒரு நிலை எனக்கு வந்துடுத்தே...பகவானே நீங்க பார்த்துண்டு இருக்கலாமா? பாரம்பரியமா போட்டுண்டு இருக்கிற இந்த கடுக்கன் யாரோ ஒருத்தரோட கைக்குப் போகப்போறதே. இதை மட்டும் விற்க வேண்டாதபடிக்கு என்னோட கஷ்டம் தீர்ந்துதுன்னா, இதை உங்ககிட்டேயே சமர்ப்பிச்சுடறேன்..!" அப்படின்னு கதறி அழுதார்.

 தன் அடியவர் இப்படி மனம் கலங்கும் போது பார்த்துக் கொண்டிருக்க அந்த கருணாமூர்த்தியால் முடியுமா?.கொஞ்சநேரத்துக்கெல்லாம், அவர் வேலைபார்த்த இடத்தில் இருந்து ஒரு ஆள் வந்து, "சார் முதலாளி ஒங்களை உடனே கூட்டிண்டு வரச்சொன்னார்".அவரும் உடனே போனார்

அவர் இடத்துக்குப் போட்ட புது ஆள்,கணக்கெல்லாம் தப்புத்தப்பா எழுதியதால், உடனடியா சரி செய்ய அவரை பழைய இடத்துக்கே மாற்றியுள்ளதாகவும்,பயணப்படி இத்யாதிக்கெல்லாம் பணம்தரச் சொல்லியிருப்பதாகவும் கூறினார்முதலாளி.

பரமாசார்யாளை வேண்டின அடுத்த க்ஷணமே தன்னோடமொத்த கஷ்டமும் முடிவுக்கு வந்து விட்ட சந்தோஷத்தோடு புறப்பட்டுப் போய் சேர்ந்தார்.

 அப்படியே ஆறேழு மாசம் நகர்ந்தது.பரமாசார்யாளை அவர் பார்க்க வர்றதும் குறைஞ்சுது.ஒரு நாள் திடீர்னு அவருக்கு காதுல லேசா வலி ஏற்பட்டு,பொறுக்கவே முடியாதபடிக்கு வலி அதிகரிச்சு டாக்டரைப் பார்க்க போனார். டாக்டரும் நிறைய பரிசோதனை பண்ணிவிட்டு "இது கொஞ்சம் சிவியரா இருக்கும்னு நினைக்கிறேன். அநேகமா ஆபரேஷன் பண்ண வேண்டியிருக்கலாம்.

அதனால சென்னைக்குப் போய் பெரிய டாக்டர் யாரையாவது பாருங்கோ" என்று சொல்லி விட்டார். 

பதறி அடிச்சுண்டு சென்னைக்கு வந்தவர், பிரபல டாக்டர் ஒருவரிடம் காட்டிய போது,அந்த  டாக்டரும் ஆபரேஷன் பண்ணியே ஆகணும்னுசொல்லி, "நாளைக்கு கார்த்தால வந்து அட்மிட்ஆகிடுங்கோ..! அப்படி வர்றச்சே கடுக்கனைக் கழட்டி பத்திரமா வைச்சுட்டு வந்துடுங்கோன்னு சொன்னதும் தான், அவருக்கு மனசுக்குள்ளே ஞாபகம் வந்தது. 

  "அடடா..கஷ்டமெல்லாம் தீர்ந்தா கடுக்கனை சமர்ப்பிக்கறதா வேண்டிண்டோமே. அதை செலுத்தவே இல்லையே.கழட்டறதே கழட்டறோம் கடுக்கனை கையோடு எடுத்துண்டுபோய் ஆசார்யா கிட்டேகுடுத்துட்டு வந்துடுவோம்"னு நினைச்சவர் அவசர அவசரமாக காஞ்சிபுரம் புறப்பட்டார்.

 சில வேதவித்துகள் போகிற வழியில் பெரியவாளை தரிசிக்க மடத்துக்கு வந்தார்கள்.அவர்களுக்கெல்லாம் குங்குமத்தோட ஆளுக்கு ஒரு பழமும் கொடுத்த பெரியவா கொஞ்சம் இளைஞரா இருந்த ஒருத்தரை மட்டும், "நீ கொஞ்ச நேரம் இரு,அப்புறம் போகலாம்!" என்றார். அவர்கள் சேர்ந்து வந்ததனால்,எல்லாரும் மடத்துல ஒரு இடத்தில் போய் உட்கார்ந்திருந்தார்கள். 

 கொஞ்சநேரத்தில், காதுவலி பக்தர் அங்கே வந்தார். தான் வேண்டிண்டது  முதல் காது ஆபரேஷன் வரை எல்லாத்தையும் சொல்லி, கடுக்கனை ஒரு மூங்கில்தட்டுல வைச்சு பெரியவாளிடம் வைத்தார்.

 பெரியவாஒரு ஆரஞ்சு பழம் தோலை உறிச்சு,அந்த பழத்தை பக்தர்கிட்டே குடுத்து வழி அனுப்பினார்.அடுத்ததா தன் பக்கத்தில் இருந்த ஒருத்தர்கிட்டே "வேத வித்துகள்ல இளைஞரா இருந்தவரை கூப்பிடச் சொன்னார்!"

 "என்ன, நேத்திக்கு வேதமந்திரம் சொல்றச்சே இவாள்லாம்காதுல கடுக்கன் போட்டுண்டு இருக்கா. நமக்கு வசதி இல்லாம வேப்பங்குச்சியை செருகிண்டு இருக்கோமேன்னு மனசுக்குள்ளே குறைப்பட்டுண்டியா? இந்த இதை  எடுத்துண்டுபோய் சுத்தி பண்ணிப் போட்டுக்கோ"பக்கத்தில் இருந்த கடுக்கன்களைக் காட்டிச் சொன்னார்.அந்த இளைஞர் நெக்குருகி போனார்.

  ஆபரேஷன் பண்ணிகறதுக்காக ஆஸ்பத்திரிக்குப் போன அந்த காதுவலி பக்தர்,தன்னோட வலி கொஞ்சம் குறைஞ்சிருக்கிறதை உணர்ந்து டாக்டர் கிட்டே சொன்னபோது, எதுக்கும் இன்னொருதரம் செக் பண்ணினடாக்டர்,ஆபரேஷனே வேண்டாம். சாதாரண மருந்துல குணமாகிவிடும்என்று சொல்லிகுடுத்த சொட்டு மருந்தில் அவர் காதுவலி காணாமல் போனது. 

 காஞ்சி மகானின் கருணையும் அவரின் பூரணத்துவத்தையும் அவரை சரணடைந்தவர்கள் நன்கு அறிவார்கள். 

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 

ஸ்ரீ மகாபெரியவா சரணம்…

Trending News

Latest News

You May Like