1. Home
  2. ஆன்மீகம்

இன்று வெள்ளிக்கிழமை இராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றுவது நல்லது..!

1

ராகு கால நேரத்தில் முதல் அரை மணிநேரம் மிகவும் மோசமானது.அடுத்துள்ள அரை மணிநேரம் பரவாயில்லை. கடைசி வரும் அரை மணிநேரமானது பூஜை செய்ய முக்கியமான நேரமாகும்.

செவ்வாய் கிழமை இராகு கால பூஜை செய்வது விசேஷமானது.இந்த பூஜையால் திருமணத் தடை ,முன்னேற்றத் தடை,கடன் பிரச்சனைகள்,சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை ,வீடு,மனை தொடர்பான பிரச்சனைகள்,விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கும்.செவ்வாய் கிழமை மதியம் 3மணி முதல் 4.30 வரை.மங்கள வார பூஜை செய்வாய் கிழமையில் செய்தல் வேண்டும்.அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி வழிபட வேண்டும்.

வெள்ளிக்கிழமை இராகு காலத்தில் செய்யும் பூஜை குடும்ப பலன் சீராகும்.தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும்.பொன் ,பொருள் சேரும்.மக்கட் பேறு கிட்டும்.வெள்ளி கிழமை ராகு காலம் காலை 10.30 மணி முதல் 12மணி வரை.வெள்ளிகிழமை சுமங்கலி பூஜை செய்வது சிறப்பு.இந்நாளில் துர்க்கை அம்மனுக்கு பூ,மஞ்சள்,குங்குமம் ,வெற்றிலை பாக்கு ,மாங்கல்ய கயிறு இவைகளை வைத்து பூஜித்து சுமங்கலிக்கு வழங்க வேண்டும்.மாதம் 1முறையாவது இதை செய்வது நலம்.

ஞாயிற்றுக் கிழமை இராகு காலத்தில் செய்யும் வழிபாட்டினால் தீராத நோய்களின் தாக்கம் குறையும்.எதிரிகள் பயம் நீங்கும்.பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும்.வெளி நாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.ஞாயிற்று கிழமை ராகு காலம் மாலை 4.30 மணி முதல் 6மணி வரை.

#துர்க்கையும்_திசையும்!

#ராகுவின் அதிதேவதையான துர்க்கை, பொதுவாக வடக்கு திசை நோக்கியே காட்சி தருவாள். சில ஆலயங்களில் திசை மாறியும் எழுந்தருளியிருப்பதைத் தரிசிக்கலாம்.

#கிழக்கு_நோக்கிய_துர்க்கை:

#கதிராமங்கலம் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள துர்க்கை கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளாள். இந்தத்தலம், கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ளது. இங்கு காவிரி வடக்கு நோக்கி உத்தரவாகினியாக ஓடுவது தனிச்சிறப்பு. அதன் கரையில் அமைந்துள்ள நவ துர்க்கைகளுள் ஓர் அம்சமாகிய "#வனதுர்க்கை', மிருகண்டு முனிவரால் வழிபடப்பட்டவள். கவியரசர் கம்பர் பெருமானும் இந்த அன்னையின் அருள் பெற்றவர்.

#தெற்கு_நோக்கிய_துர்க்கை:

#நாகை மாவட்டம் #வேதாரண்யம் ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயத்திலும் கும்பகோணதிற்கு அருகே #அம்மன்குடி திருத்தலத்திலும் #திருவாரூர் ஆந்தக்குடி ஸ்ரீ சோமேஸ்வரர் ஆலயத்திலும் துர்க்கை தெற்கு நோக்கி அருள்புரிகிறாள்.

#மேற்கு_நோக்கிய_துர்க்கை:

#திருவெண்காடு #புதன் திருத்தலம். இத்தலத்தில் துர்க்கை மேற்கு திசை நோக்கி அருள் புரிகிறாள். இத்துர்க்கையை வழிபட தடைகள் விரைவில் நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும்.

#சயன_துர்க்கை:

பொதுவாக ஸ்ரீ ரங்கநாதரையே பள்ளி கொண்ட கோலத்தில் நாம் தரிசிக்க முடியும். அம்பிகை பள்ளிகொண்ட கோலத்தில் தரிசிப்பது அரிது. ஆனால் #திருநெல்வேலியிலிருந்து தாழையூத்துக்குச் செல்லும் வழியில் கங்கை கொண்டான் என்ற திருத்தலத்துக்கு அருகில் உள்ள "#பாராஞ்சேரி' என்னும் இடத்தில் படுத்துள்ள கோலத்தில் துர்க்கையை தரிசிக்கலாம்.

#சஞ்சலம்_நீக்கும்_சயன_துர்க்கை!

வாழ்வில் மேன்மை பெறவும், துன்பம் நீங்கவும் துர்க்கா தேவியை வணங்க வேண்டும் என்றும், மங்கள ரூபிணியான அவள் தரிசனம் கண்டாலே சர்வ மங்களங்களும் உண்டாகும் என்றும் நமது முன்னோர்கள் வழிகாட்டியுள்ளனர்.

அந்த துர்க்கையம்மனை ஆலயங்களில் பெரும்பாலும் கோஷ்ட தெய்வமாக சந்நிதி கொண்ட நிலையில் சிவதுர்கையாகவோ அல்லது விஷ்ணு துர்கையாகவோ தரிசிக்கலாம். அபூர்வமாக சில இடங்களில் தனிக்கோயிலிலும், அமர்ந்த கோலத்திலும் காணப்படுவது உண்டு.

ஆனால் அந்த அம்மன் சயன கோலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலம் ஒன்று செழியநல்லூரில் உள்ளது. திருநெல்வேலிக்கு தெற்கே 25 கி.மீ. தொலைவில் கங்கைகொண்டான் வழி, பராஞ்சேரி அருகில் உள்ளது #செழியநல்லூர்.

பல வருடங்களுக்கு முன் செழியநல்லூர் பகுதியை செழியன் என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் காவல் தெய்வமாக வடக்கில் செழிய அம்மனையும், கிழக்கில் தர்மசாஸ்தாவையும்,தெற்கில் வலம்புரி விநாயகரையும், மேற்கே தன்னுடைய குல தெய்வமாகிய வன துர்க்கையையும் அமைத்து தினந்தோறும் குடும்பத்துடன் வழிபட்டு வந்தான்.

ஒருமுறை வனதுர்க்கை வழிபாட்டிற்கு வந்த தருணத்தில் அரசனின் எட்டு வயது பெண் குழந்தை வீடு திரும்பாமல் வனத்திலேயே தங்கிவிட்டது. தனது பெற்றோரைக் காணாது தவித்துக்கொண்டிருந்த அந்தக் குழந்தையின் நகைகளை அபகரிக்க வந்தான் ஒரு திருடன். அச்சத்தில் அலறிய அந்தக் குழந்தை ஓடிவந்து வனதுர்க்கை அம்மனை கட்டிக்கொண்டது.

திருடன் குழந்தையைப் பிடித்து இழுக்க, குழந்தையுடன் அம்மனின் சிலையும் கீழே சாய்ந்தது. அப்போது துர்க்கை பிரசன்னமாகி திருடனை வதம் செய்ததுடன்,குழந்தையையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டாள். அரசனின் கனவிலும் அந்தத் தகவலைத் தெரிவித்தாள்.

இப்போதும் அந்த அன்னை சயனக் கோலத்திலே அந்தக் குழந்தையை கல் ரூபத்தில் தனது பக்கத்தில் வைத்து காத்தருள்கிறாள் என்கின்றனர். மேலும் துர்க்கையம்மன் நாகராஜபரிவார தேவதைகளுடன் தல விருட்சமாகிய வேப்பமரத்தின் அடியில், சயனக் கோலத்தில் வெட்ட வெளியில் மேலே வானத்தை பார்த்த நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள்.

இந்த #வேப்பமரத்தின்_இலைகள் #கசப்பதில்லை என்பது மற்றொரு சிறப்பு. இவற்றை உண்பவருக்கு நோய்கள் தீரும் என்பதும் நம்பிக்கை. இவ்வாலயத்தில் விஷ்ணு துர்க்கை, வலம்புரி விநாயகர், பாலசுப்ரமண்யர் சந்நிதிகளும் உள்ளன.

இவ்வாலயத்தில் ஆனி மாதத்தில் உத்திராட நட்சத்திரத்தில் வருஷாபிஷேகமும், புரட்டாசி மாதத்தில் நவராத்திரியும், மாசி மாதத்தில் சிவராத்திரியும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சயன துர்க்கையை வழிபடுவோருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். தீராத நோயும் தீரும்.

Trending News

Latest News

You May Like