இந்த ஆவணி மாதத்தில் உள்ள முக்கிய விசேஷங்கள், விரத நாட்கள், சுபமுகூர்த்த மற்றும் வாஸ்து நாட்கள்..!
சூரிய பகவான், சிம்ம ராசியில் தன்னுடைய பயணத்தை துவங்கும் இந்த மாதத்தில், ஆடி மாதம் நடத்தாமல் நிறுத்தி வைத்திருந்த திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவார்கள். அதனால் இதை திருமண மாதம் என்றும், சுப முகூர்த்த மாதம் என்றும் சொல்கிறார்கள்.
ஆவணி மாதம் என்பது திதி, நட்சத்திரங்கள் இரண்டுமே சிறப்பு பெறும் மாதமாகும். இந்த மாதத்தில் வரும் அவிட்டம், மூலம் நட்சத்திரங்களும், சதுர்த்தி திதியும் மிக விசேஷமானதாகும். இந்த ஆண்டு ஆவணி மாதம் ஆகஸ்ட் 17ம் தேதி சனிக்கிழமை துவங்கி, செப்டம்பர் 16ம் தேதி வரை உள்ளது.
மொத்தம் 31 நாட்கள் கொண்ட ஆவணி மாதத்தின் முதல் நாளே சனிப் பிரதோஷ நாளாக அமைந்தது. தொடர்ந்து வரிசையாக விரத மற்றும் விசேஷங்கள் நிறைந்ததாக இந்த ஆண்டு ஆவணி மாதம் அமைகிறது.ஆவணி அவிட்டம் நாளின் கடந்த வருடத்தில் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக ஒரு புனித சபதம் எடுக்கப்படுகிறது. இந்த நேரத்தில் புனித மந்திரங்கள் உச்சரிக்கப்பர். பிராமணர்கள் சூரிய உதயத்தில் இருந்து புனித நீராடுவார்கள். ஆவணி அவிட்டம் அன்று பிராமணர்கள் ஜனேயு அல்லது ய்ஜ்பவித் எனப்படும் புதிய புனித நூலை அணிவார்கள் .
ஆவணி மாதம் 2024 முக்கிய விசேஷங்கள் :
- ஆகஸ்ட் 19 (ஆவணி 03) திங்கள் - ஆவணி அவிட்டம்
- ஆகஸ்ட் 20 (ஆவணி 04) செவ்வாய் - காயத்ரி ஜெபம்
- ஆகஸ்ட் 22 (ஆவணி 06) வியாழன் - மஹா சங்கடஹர சதுர்த்தி
- ஆகஸ்ட் 26 (ஆவணி 10) திங்கள் - கிருஷ்ண ஜெயந்தி
- ஆகஸ்ட் 27 (ஆவணி 11) செவ்வாய் -பாஞ்சராத்திர ஜெயந்தி
- செப்டம்பர் 07 (ஆவணி 22) சனி - விநாயகர் சதுர்த்தி
- செப்டம்பர் 15 (ஆவணி 30) ஞாயிறு - ஓணம் பண்டிகை
- செப்டம்பர் 16 (ஆவணி 31) திங்கள் - மிலாடி நபி
ஆவணி மாதம் 2024 முக்கிய விரத நாட்கள் :
- அமாவாசை - செப்டம்பர் 02 (திங்கள்) ஆவணி 17
- பெளர்ணமி - ஆகஸ்ட் 19 (திங்கள்) ஆவணி 03
- கிருத்திகை - ஆகஸ்ட் 26 (திங்கள்) ஆவணி 10
- திருவோணம் - ஆகஸ்ட் 18( ஞாயிறு) ஆவணி 02, செப்டம்பர் 14 (சனி)ஆவணி 29
- ஏகாதசி - ஆகஸ்ட் 29 (வியாழன்)ஆவணி 13, செப்டம்பர் 14 (சனி) ஆவணி 29
- சஷ்டி - ஆகஸ்ட் 25 (ஞாயிறு) ஆவணி 09, செப்டம்பர் 09 (திங்கள்) ஆவணி 24
- சங்கடஹர சதுர்த்தி - ஆகஸ்ட் 22 (வியாழன்) ஆவணி 06
- சிவராத்திரி - செப்டம்பர் 01 (ஞாயிறு) ஆவணி 16
- பிரதோஷம் - ஆகஸ்ட் 17 (சனி) ஆவணி 01, ஆகஸ்ட் 31 (சனி) ஆவணி 15
- சதுர்த்தி - செப்டம்பர் 07 (சனி) ஆவணி 22
ஆவணி மாதம் 2024 சுபமுகூர்த்த நாட்கள் :
- ஆகஸ்ட் 22- ஆவணி 06 (வியாழன்) - தேய்பிறை முகூர்த்தம்
- ஆகஸ்ட் 23 - ஆவணி 07 (வெள்ளி) - தேய்பிறை முகூர்த்தம்
- ஆகஸ்ட் 30 - ஆவணி 14 (வெள்ளி) - தேய்பிறை முகூர்த்தம்
- செப்டம்பர் 05 - ஆவணி 20 (வியாழன்) - வளர்பிறை முகூர்த்தம்
- செப்டம்பர் 06 - ஆவணி 21 (வெள்ளி) - வளர்பிறை முகூர்த்தம்
- செப்டம்பர் 08 - ஆவணி 23 (ஞாயிறு) - வளர்பிறை முகூர்த்தம்
- செப்டம்பர் 15 - ஆவணி 30 (ஞாயிறு) - வளர்பிறை முகூர்த்தம்
- செப்டம்பர் 16 - ஆவணி 31 (திங்கள்) - வளர்பிறை முகூர்த்தம்
ஆவணி மாதம் 2024 அஷ்டமி, நவமி, கரி நாட்கள் :
- அஷ்டமி - ஆகஸ்ட் 26 (திங்கள்) ஆவணி 10, செப்டம்பர் 11 (புதன்) ஆவணி 25
- நவமி - ஆகஸ்ட் 27 (செவ்வாய்) ஆவணி 11, செப்டம்பர் 12 (வியாழன்) ஆவணி 27
- கரி நாட்கள் - ஆகஸ்ட் 18 (ஞாயிறு) ஆவணி 02, ஆகஸ்ட் 25 (ஞாயிறு) ஆவணி 09, செப்டம்பர் 13 (வெள்ளி) ஆவணி 28
ஆவணி மாதம் 2024 வாஸ்து நாட்கள் :
ஆகஸ்ட் 22 (வியாழன்) ஆவணி 06 - காலை 07.23 முதல் 07.59 வரை