1. Home
  2. ஆன்மீகம்

இதை தெரிஞ்சிக்கோங்க..! நாகதோஷம் உள்ளவர்கள் கண்டிப்பாக போக வேண்டிய கோயில் இது...

1

திருச்சி நாச்சிக்குறிச்சியில் அமைந்துள்ளது மதவாயி அம்மன் கோயில். 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயிலில் அம்மன் சன்னிதியும், பிள்ளையார்சன்னிதியும் அமைந்துள்ளன.  ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றது.

ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் 15 நாட்கள்  இங்கு நடக்கும் திருவிழா வெகுபிரசித்தமானது. திருமணப்பேறு வேண்டியும்,  கணவரது நலிவடைந்த ஆரோக்யம் மேன்மைபெறவும் மதவாயி அம்மனை வேண்டி வேண்டுதல் நிறைவேறியதும் தாலி காணிக்கை செலுத்தும் பெண் பக்தர்கள் இங்கு அதிகம்.  பிடித்திருக்கும் பில்லி சூனியம் இத்தலத்தில் பட்ட அனைத்து நொடி ஓடிவிடும் என்பதை பக்தர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

இத்தலத்தில் மற்றொரு சிறப்பு நாகதோஷம்  தீர்க்கும் தலமாக விளங்குவது. மதவாயி அம்மனின் ஆலயத்தின் தெற்குபதியில் நாகர்கள் சன்னிதி இருக்கிறது. நாக தோஷம் உள்ள பக்தர்கள் ராகு காலங்களில் இந்த நாகர்கள் சன்னிதியில் வழிபாடு செய்து தோஷங்களை போக்கிகொள்கிறார்கள்.  நாகதோஷம் தீவிரமாக இருப்பவர்கள் பரிகாரமாக நாகர் கற்சிலைகளை  இந்த சன்னிதியின் முன்பு வைத்து வழிபாடு செய்கிறார்கள்.பக்தர்கள் வைத்த நாக கற்சிலைகள் இந்த ஆலயத்தில் அதிகமிருக்கிறது.

நாகச்சன்னிதி தொடர்ந்து நாகப்பன் சுவாமி சன்னிதியும் உண்டு. எத்தகைய விஷக்கடிகளால் பாதிக்கப்பட்டவர்களும் இங்கு வந்து வழிபட்டு  பாதிப்புகள் நீங்க செல்கின்றனர் என்பதை கண்கூடாக காணலாம். மதவாயி அம்மன் கோயிலில் குடிகொண்டிருக்கும் நாகர்கள் சன்னிதியின் அருளால் இந்த ஊரில் பாம்பு  யாரையும் தீண்டுவதில்லை. மக்கள் புழங்கும் இடங்களில் சர்ப்பங்கள் நிறைந்திருந்தாலும் அவர்கள் சர்ப்பத்தின் அருகே காலி குடங்களை சாய்த்து வைக்கிறார்கள். பாம்பு குடத்தினுள் சென்றதும் அதை மூடி  பாம்பை ஆலயத்தில்  கொண்டு வந்து விட்டுவிடுகிறார்கள். இங்கிருக்கும் குடும்பங்களுக்கு நாகப்ப சுவாமியே குலதெய்வமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like