1. Home
  2. ஆன்மீகம்

இதை தெரிஞ்சிக்கோங்க..! மாட்டுச் சாணத்தை வீட்டில் ஏன் மெழுகச் சொன்னார்கள் தெரியுமா ?

1

மாட்டுச் சாணத்தை வீட்டில் ஏன் மெழுகச் சொன்னார்கள்?

மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகுவதால், வெளியிலிருந்து வரும், தவறான உணர்வுகளின் நஞ்சானது அடக்கப்படுகின்றது.

நாம் வெளியே எங்கே சென்றாலும், அங்கே விஷ அணுக்களின் தன்மை பரவிப் படர்ந்துள்ளது. அவைகள் நம் பாதங்களில் பட்டவுடன், நமது உடலில் சேர்கின்றது அந்த உணர்வின் வலிமையை நுகர்ந்தால், நமக்குள் அது வலிமை பெறுகின்றது.

விஷத்தின் உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்தாலும்,வாசனையுள்ள சாணத்தின் மீது நமது பாதம் பட்டபின், நமக்குள் விஷத்தை ஒடுக்கும் ஆற்றலைப் பெறுகின்றோம்.ஏனென்றால், மாடு விஷத்தின் தன்மையைத் தன் உடலாக்கியபின், விஷத்தை நீக்கிய நல்ல உணர்வின் தன்மையாக, மாட்டின் சாணம் வெளிப்படுகின்றது. ஆகவே, விஷத்தை ஒடுக்கும் வல்லமை மாட்டின் சாணத்திற்கு உண்டு.

ஆகையால், ஞானிகள் “மாட்டின் சாணத்தை வீட்டில் தெளி” என்றார்கள். மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகினால், நம்மால் வெளியிடப்பட்டு, வீட்டில் பதிந்துள்ள சங்கடம், சலிப்பு, வேதனை, போன்ற உணர்வுகளை அது கொல்கின்றது.

 

Trending News

Latest News

You May Like