1. Home
  2. ஆன்மீகம்

உங்கள் குல தெய்வம் யார் என்று தெரியவில்லையா..? இது உங்களுக்கான பதிவு..!

1

நம்மில் பலருக்கு வாழ்க்கை என்பது ஒரு பெரும் போராட்டமாகவே இருக்கும். எந்த ஜோதிடரிடம் போய் ஜாதகத்தை காட்டினாலும் அவர் முதலில் சொல்வது குலதெய்வ வழிபாடு தான்.  

 மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் சேர்த்துப் பெற்று தர வல்லது இந்த குலதெய்வ வழிபாடு. இவ்வளவு ஏன் எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும் என்ற கருத்தில் இருந்து, குலதெய்வ வழிபாட்டின் சிறப்பினைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

வாழ்க்கையில் அதிகமாக கர்மவினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு. அத்தகையவர்கள், ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு சென்று அர்ச்சனை செய்து தங்களின் குலதெய்வத்தினை தங்களுக்கு காட்டிருளும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது அந்த சமயத்தில் வேறு எந்த கோரிக்கைகளையும் காலபைரவ பெருமானிடம் வைக்கக்கூடாது.

இவ்வாறு உடல் மற்றும் மன சுத்தியுடன், 9 வாரங்கள் வியாழக்கிழமையில் குரு ஓரையில் காலபைரவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும். அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும். விரதம் மேற்கொள்ளும் இந்த 9 வியாழக்கிழமைகளில் கண்டிப்பாக புலனடக்கம் தேவை.

இப்படி செய்வதால் காலபைரவர் தங்களின் குலதெய்வம் பற்றி யார் மூலமாகவோ அல்லது கனவிலோ அறிய வைப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை  இன்றும் நிலவுகிறது. இந்த வழிபாட்டினை அசைவ உணவை நிரந்தரமாக நிறுத்திய பின்பே செய்ய வேண்டும்.

Trending News

Latest News

You May Like