1. Home
  2. ஆன்மீகம்

ஏன் 108 எண்ணுக்கு மட்டும் பெரும் சிறப்பு உள்ளது தெரியுமா ?

1

வேதத்தில் 108 உபநிடதங்கள்.

வைணவ திவ்ய  தலங்கள் 108

பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம், சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு. 

பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள தூரம், சூரியனின் விட்டத்தைப் போல 108 மடங்கு.

நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108

அர்ச்சனையில் 108 நாமங்கள்.

அரசமரத்தை. 108 முறை வலம் வருவது பெரும் பலன் தரும். 

சூரியனின் விட்டம், பூமியில் விட்டத்தைப் போல 108 மடங்கு.

ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசைகளால் வரவேற்கப்படும். இந்த ஓசை 108 வகை மனத் தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

முக்திநாத் தலத்தில் 108 நீரூற்றுக்கள்.
 
உத்தரகண்டில் ஜோகேஸ்வரர் சிவன் கோவிலில், 108 சிவசந்நிதிகள்.
 
உடலில் 108 மர்ம ஸ்தானங்கள் என வர்மக்கலை கூறுகிறது.

மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

சீக்கிய குருமார்கள், 108 முடிச்சுகள் உள்ள கம்பளி ஜபமாலையையே பயன்படுத்துவார்கள்.

108 சக்தி நாடிகள், உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவதாக, தந்திர சாஸ்திரம் கூறுகிறது.

ஜபமாலையில் 108 அல்லது 54 அல்லது 27 மணிகள் கொண்ட மாலைகளும் உண்டு. இந்த எண்ணிக்கைகளைக் கூட்டினால் ஒன்பது வருகிறது

Trending News

Latest News

You May Like