1. Home
  2. ஆன்மீகம்

சாமி சிலைகள் கருங்கல்லில் வடிப்பது ஏன் தெரியுமா ?

1

நாம் எந்த கோவிலுக்குச் சென்றாலும் அங்குள்ள சுவாமியின் சிலைகள் நூற்றுக்கு 99 சதவீதம் கருங்கல்லில் செதுக்கப்பட்டவையாகவே இருக்கும்.

இது காரணம் இல்லாமலெல்லாம் கிடையாது. இப்படி சாமி சிலைகள் கருங்கல்லில் இருப்பதற்கும் சில ரகசியங்கள் உண்டு. அவை என்னென்ன தெரியுமா?

உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகம். குறிப்பாக, கருங்கல் எந்த சக்தியையும் தன்வசப்படுத்திக் கொள்ளும் கொள்ளும் தன்மை உடையது.

இந்த கருங்கல்லானது நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்து வகையான பஞ்சபூதத்தின் தன்மைகளைக் கொண்டுள்ளது.

கருங்கல்லில் தண்ணீர் உள்ளதால் தான் அது குளிர்ச்சியான நிலையிலேயே இருக்கிறது.

நிலம் என்பது கல்லுக்குள் இருக்கிறது.

கருங்கல்லில் நெருப்பும் உண்டு. அதனால்தான் ஒன்றுடன் ஒன்று உரசும்போது தீ பற்றுகிறது.

கல்லில் காற்று உள்ளதால் தான் கருங்கல் பாறைகளுக்கு இடையில் தேரைகள் வாழ்கின்றன.

ஆகாயத்தைப் போலவே வெளியில் உள்ள சத்தங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் திறன் கல்லுக்குள் உண்டு.

கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட கோவிலில் அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது, அந்த கோவிலின் பஞ்ச பூதங்களின் தன்மை அதிகரிக்கிறது.

அத்தகைய கோவிலில் நாம் வணங்கும் போது, நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகுவதுடன், நம் வாழ்வில் நல்ல பலன்களும் கிடைக்கிறது.

இந்த காரணத்தினால் தான் கோவில்களில் உள்ள சிலைகள் கருங்கல்லில் வடிவமைக்கப்படுகிறது

Trending News

Latest News

You May Like