எந்த திதியில் எந்த விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும் தெரியுமா ?
நாம் எந்த காரியத்தை செய்வதாக இருந்தாலும் முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் எந்த திதியில் எந்த விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும் என விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். திதிகளில் வணங்க வேண்டிய கணபதிகள் இவர்கள் தான்.
சந்திரன் தினமும் சுமார் 12 டிகிரி சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருப்பார். 15 ஆவது தினமான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180 டிகிரி தூரத்தில் இருப்பார். அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது. அதாவது இராசிச் சக்கரத்தில் சூரியனில் இருந்து 7-வது ராசியில் சஞ்சரிப்பார்.
அம்மாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12 டிகிரி விலகி இருப்பார். அன்று முதல் திதியாகிய “பிரதமையும்”. மறு நாள் இன்னும் ஒரு 12டிகிரி விலகியிருப்பார். அன்று இரண்டாவது திதியாகிய துதியையும், இப்படியே தொடர்ந்து 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி. 13. திரயோதசி, 14. சதுர்தசியும், 15-ம் நாள் பெர்ணமித் திதியும் ஏற்படுகின்றது. சந்திரன் அம்மாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் என்று அழைக்கப்பெறுகின்றன. இந்த 15 நாட்களையும் சுக்கிலபக்ஷ் திதிகள் என்பார்கள்.
அமாவாசை : நிருத கணபதி
பிரதமை : பால கணபதி
த்விதியை : தருண கணபதி
திருதியை : பக்தி கணபதி
சதுர்த்தி: வீர கணபதி
பஞ்சமி: சக்தி கணபதி
சஷ்டி : த்விஜ கணபதி
சப்தமி : சித்தி கணபதி
அஷ்டமி : உச்சிஷ்ட கணபதி
நவமி : விக்ன கணபதி
தசமி : க்ஷிப்ர கணபதி
ஏகாதசி : ஹேரம்ப கணபதி
துவாதசி : லசுட்மி கணபதி
திரையோதசி : மகா கணபதி
சதுர்த்தசி : விஜய கணபதி
பௌர்ணமி : நிருத்ய கணபதி
அதே போல் பௌர்ணமி திதியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்கிறார். அவற்றிற்கும் முறையே அந்த 15 திதிகளின் பெயர்களே குறிப்பிடப்படும். ஆனால் தேய்பிறையாக உள்ளதால் கிருஷ்ணபக்ஷ் திதிகள் எனக் கூறுவார்கள்.