1. Home
  2. ஆன்மீகம்

இது தெரியுமா ? வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்... வெற்றி நிச்சயம்..!

1

முக்கனிகள் என்பது மா, பலா, வாழை.  முக்கனிகளையும் விட சிறப்புமிக்கது எலுமிச்சம் பழம். ஏனெனில் மாம்பழத்தில் வண்டுகள் இருக்கும். வாழையில் புள்ளிகள் இருக்கும். பலாவில் வியர்வை இருக்கும். ஆனால் எவ்விதமும்  குற்றமில்லாத பழம் எலுமிச்சம்பழம் என்பதால் கனிகளில் இது ராஜகனி என்றும், தேவலோகத்தில் முக்கியமாக இருப்பதால் தேவகனி என்றும்,  சிவனுக்கு உகந்த நேர்கனி என்றும் துர்க்கையம்மனுக்கு நிகரானதாகவும் பெருமைப் பெற்றுள்ளது. எல்லா வகையிலும் உயர்ந்த கனியான எலுமிச்சம்பழத்தை வெளியில் செல்லும்போது எடுத்துச் சென்றால் எண்ணிய காரியம் நிறைவேறும். தீயசக்திகள் அண்டாது என்பது ஐதிகம். உயரதிகாரிகளையோ, உயர்ந்த மனிதர் களையோ சந்திக்கும் போது  அவர்களிடம் எலுமிச்சம்பழத்தைக் கொடுத்து சந்தித்தால் சந்திப்பு நல்லவிதமாக அமையும் என்பது நம்பிக்கை.

எலுமிச்சம்பழம் மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி கொண்டவை.  கோவில்களின் முன்பகுதியில் கிராமங்களில் இருக்கும் ஊர் காவல் தெய்வங்கள், அம்மன் கோயில்களில் உள்ள சூலாயுதத்தில் எலுமிச்சையை செருகுவார்கள். துர்க்கையம்மன், பத்ரகாளியம்மன், மாரியம்மன், பைரவர்,நடராஜர் போன்ற தெய்வங்களுக்கு கனி மாலை சாத்தும் வழக்கம் உண்டு. கனி மாலை என்றாலே எலுமிச்சை மாலைதான். ஒரே அளவில் நல்ல நிறமுள்ள 18 ,45,54,108 எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த மாலை அமையும். சிவகங்கை மாவட்டம் மடப்புரம்காளி கோயிலில் அம்மனுக்கு அணிவிக்கப்படும் எலுமிச்சைம்பழம் அனைத்தும் பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது.

குழந்தை இல்லாத பெண்களுக்கு தஞ்சாவூர் வல்லம் ஏவுகரி அம்மன் கோயிலில் எலுமிச்சைச்சாறை பிரசாதமாக கொடுப்பார்கள். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றுவதற்கு எலுமிச்சைதான் மிகவும் உகந்தது. ஆனால் எலுமிச்சை விளக்கை ஆலயங்களில் மட்டுமே ஏற்ற வேண்டும்.நல்ல சக்திகளையும் மந்திரங்களையும் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் எலுமிச்சைக்கு உண்டு. வீடுகளில் விளக்கேற்றும் போது வாசலில் எலுமிச்சம் பழத்தில் மஞ்சள், சிகப்பு பொட்டு வைப்போம். ஆனால் பொதுவாகவே வீட்டில் கண் திருஷ்டி அதிகமாக இருந்தால் முகக்கண்ணாடியை வாசலில் மாட்டிவைப்பார்கள்.  ஒரு கண்ணாடித் தம்ளரில் நீரை நிரப்பி எலுமிச்சையை அதில் போட்டு வைத்தால் கண் திருஷ்டி மறைந்துவிடும்.   

Trending News

Latest News

You May Like