இது தெரியுமா ? அரைஞாண் கயிறு கட்டுவது ஏன்..!
திருஷ்டி படகூடாது எனப்தற்காக சின்ன வயதில் நம் பெற்றோர், நம் இடுப்பில் கட்டிவிடும் ஒரு கயிறுதான் அரைஞான் கயிறு.. ஆனால், இதில் மருத்துவம காரணங்கள் உள்ளது.
ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை,ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே, இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டுகிறது பழக்கம் ஏற்பட்டது. இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது.
உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை, குடல் இறக்க நோய், இதை ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன. இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.