1. Home
  2. ஆன்மீகம்

இது தெரியுமா ? அரைஞாண் கயிறு கட்டுவது ஏன்?

1

நம் பெற்றோர் சின்ன வயதில் நம் இடுப்பில் கட்டிவிடும் ஒரு கயிறுதான் அரைஞான் கயிறு. 

திருஷ்டி படகூடாது எனப்தற்காக, இந்த கயிறை கட்டுவதாக பலரும் நினைத்துள்ளனர். ஆனால், இதில் மருத்துவம காரணங்கள் உள்ளது.

ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை,ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே, இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டுகிறது பழக்கம் ஏற்பட்டது.  இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது.

உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை, குடல் இறக்க நோய், இதை ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன. இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.

ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய இடுப்பில் அரைஞான் கயிறு கட்டிக் கொண்டிருக்க வேண்டும். இதனால் தான் அவர்களுக்கு ஏற்படும் குடலிறக்க நோய் வெகு சீக்கிரம் தாக்காமல் இருந்தது. ஆனால் இப்போது பலரும் அதனை அலட்சியம் செய்வதால் இந்நோய் அனைவருக்கும் இயல்பாக வந்துவிடுகிறது. அதிக உடல் எடையால் மற்றும் பளு அதிகம் இருக்கும் வேலைகளை செய்யும் நபர்களுக்கும் குடல் இறக்க நோய் அதிக அளவில் பாதிக்கச் செய்கிறது. ஹெர்னியா எனப்படும் இந்த நோய் பெண்களை விட ஆண்களுக்குத் தான் அதிகம் தாக்குகிறது. இதனால் பெண்களுக்கு அரைஞான் கயிறு கட்டாய படுத்தப்படவில்லை. ஆனால் உண்மையில் பெண்கள் அரைஞான் கயிறு கட்டுவது நன்மையே தரும்.

கருப்பு நிறம் என்பது தெய்வீக நிறமாக பார்க்கப்படுகிறது. துஷ்ட சக்திகளை அழிக்கும் நிறம், ‘கருப்பு நிறம்’ ஆகும். இதனால் தான் வெளியில் செல்லும் பொழுது கூட, சில பேருக்கு கையில் கரிகட்டையை கொடுத்து அனுப்புவார்கள். மருத்துவம் மற்றும் ஆன்மீகம் இரண்டிலும் அரைஞான் கயிறு கட்டுவது நன்மை தரும் என்று கூறுவதால் இதனை ஒதுக்கி விடாமல் இனிமேலும் அனைவரும் தவறாமல் கடைபிடிப்பது மிகவும் நல்லது.

Trending News

Latest News

You May Like