இது தெரியுமா ? திருப்பதியில் சனிக்கிழமை மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம்?திருப்பதியில் சனிக்கிழமை மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம்?

பெருமாள் வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சிவனாக காட்சி அளிக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?. வியாழனன்று இரவு பெருமாளின் அலங்காரத்தை கலைத்து விட்டு,அவருக்கு எளிய வஸ்திரத்தை சார்த்தி, மந்திர ரூபத்தில் அவரை சங்கர நாராயணராக மாற்றி,அவருக்கு வில்வ மாலை அணிவிக்கபடுகிறது. பின்னர் அவருக்கு ஒரு தட்டில் விபூதி மேல் கற்பூரம் வைத்து தீபாராதனை காட்டப்படுகிறது.
பெருமாள் அன்று அந்த இடத்தை விட்டு,அலமேலுமங்காபுரத்தில் உள்ள தாயாரை பார்க்க செல்வதாக ஐதீகம். அதனால் அலமேலுமங்காபுரத்தில் வெள்ளி கிழமை அன்று பெருமாளின் தரிசனத்துக்கு, கூட்டம் அலை மோதும். மறுபடியும் வெள்ளிக்கிழமை இரவு திருப்பதியில் சுவாமியை மந்திர ரூபத்தில் ஆவாகனம் செய்து, நாராயணனாக மாற்றுகிறார்கள். தாயாரை பார்த்து வந்து பரவசத்தில் இருக்கும் பெருமாளிடம்,அப்போது நாம் என்ன கேட்டாலும் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமை பெருமாளை தரிசிக்க திருப்பதியில் அத்தனை கூட்டம் சேர என்ன காரணம் என்று இப்போது புரிந்திருக்குமே.