1. Home
  2. ஆன்மீகம்

இது தெரியுமா ? எந்தெந்த தெய்வங்களுக்கு எந்தெந்த பூக்களை அர்ச்சிக்க வேண்டும்..!

1

நமக்கு விருப்பமான கடவுளை,மனதார மலர்களை கொண்டு பூஜித்து வழிபட்டால் கண்டிப்பாக கடவுள் அருள் கிடைக்கும்.

மலர்களை தெய்வத்திற்கு சமர்ப்பிக்கும் போது ஐந்து விரல்களையும் பயன்படுத்த வேண்டும்.கடவுளின் பாதங்களில் மலர்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நாம் தினமும் மலர்களை கொண்டு பூஜிக்க நினைத்தால் மலர் செடிகளை வீட்டிலேயே வளர்த்து கொள்வது நல்லது.குளித்த பிறகு பூக்களை பறிக்க வேண்டும்.கோவில் அருகில் உள்ள பூக்கடைகளில் கூட நம் பூஜைக்காக மலர்களை வாங்கி கொள்ளலாம்.ஏனெனில், அவர்களுக்கு தெரியும் எந்தெந்த தெய்வங்களுக்கு எந்தெந்த பூக்களை அர்ச்சிக்க வேண்டும் என்று.

விநாயகர்
சிவப்பு நிற மலர்கள் பிள்ளையாருக்கு விருப்பமான மலராகும்.இருப்பினும் சிவப்பு நிற செம்பருத்தி பூ அவருக்கு ரெம்ப பிடிக்கும்.மேலும் தாமரை,சாம்பா,ரோஜா,மல்லிகை,மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற சாமந்தி போன்றவற்றையும் சமர்ப்பிக்கலாம்.இதைத் தவிர்த்து அருகம்புல் (1,3,5,7),வில்வ இலைகள் மற்றும் மூலிகை இலைகள் போன்றவற்றையும் விநாயகருக்கு படைக்கலாம்.கணபதி பூஜை செய்யும் போது 21 விதமான மலர்கள் மற்றும் இலைகளை கொண்டு பூஜிக்கப்படுகிறது.

சிவபெருமான்
வெள்ளை நிற மலர்கள் இவருக்கு உகந்தது.மகிழம் பூ,நீல நிற தாமரை கிடைக்காவிட்டால் பிங்க் நிற தாமரை அல்லது வெள்ளை தாமரையை சமர்ப்பிக்கலாம்.செவ்வரளி போன்றவற்றை கொண்டு பூஜிக்கலாம்.வில்வ இலைகள் (9அல்லது 10), ஊமத்தம் பூ,நாகசேர் பூ,பாரிஜாதம் மற்றும் எருக்கம் பூ போன்றவற்றை சமர்ப்பிக்கலாம்.வில்வ இலைகள் சிவன் பூஜையில் கண்டிப்பாக இடம் பெறும் பொருளாகும்.கம்பு,தானியம் போன்றவையும் பயன்படுத்தப்படுகிறது.

துர்கையம்மன்
சிவப்பு நிற மலர்களான செம்பருத்தி,தாமரை,குண்டு மல்லி மற்றும் வில்வ இலைகள் (1அல்லது 9) போன்றவற்றை துர்கை அம்மனுக்கு சமர்ப்பிக்கலாம்.

பார்வதி தேவி
சிவனுக்கு படைக்கப்படும் எல்லா மலர்களும் அன்னை பார்வதி தேவிக்கும் அர்ச்சிக்கலாம்.அதைத் தவிர வில்வ இலைகள்,வெள்ளை தாமரை,புல் மலர்,சாம்பா (சம்பங்கி பூ) ,முட்கள் நிறைந்த பூக்கள்,சாமலி வகை பூக்கள் போன்றவற்றை கொண்டு பூஜிக்கலாம்.

விஷ்ணு
இவருக்கு தாமரை மலர் தான் மிகவும் பிடித்தது.பிங்க் நிற தாமரை,குண்டு மல்லி,மல்லிகை,சாமலி பூக்கள்,சம்பங்கி பூ, வெள்ளை கதம்பு பூக்கள்,கெவ்ரா பாசந்தி போன்றவற்றை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.துளசி இலைகள் அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.துளிசி இலைகள் (1,3,5,7,9)என்ற எண்ணிக்கையில் சமர்ப்பிக்கலாம்.

மகாலட்சுமி
மகாலட்சுமிக்கு விருப்பமான மலர் தாமரை ஆகும்.பிங்க் நிற தாமரை,மஞ்சள் சாமந்தி,நாட்டு ரோஜா வில்வ பழம் போன்றவற்றை கொண்டு அர்ச்சிக்கலாம்.

மாலை நேரத்தில் பூக்களை பறிக்க கூடாது.பூக்களை பறிக்கும் போது கண்டிப்பாக செடிக்கு நமது நன்றியை தெரிவிக்க வேண்டும்.

பூக்களை பறிக்கும் போது மந்திரம் ஓதிக் கொண்டு செய்வது நல்லது.

Trending News

Latest News

You May Like