1. Home
  2. ஆன்மீகம்

இது தெரியுமா ? வீடு சுபிட்சம் பெற நிலை வாசலில் செய்ய வேண்டியது..!

1

வீடு சுபிட்சம் பெற நிலை வாசலில் செய்ய வேண்டியது:

நிலைவாசல் எந்த வீட்டில் கவனிக்கப்படாமல் பராமரிப்பு இல்லாமல் அப்படியே இருக்கிறதோ, அந்த வீட்டில் நிச்சயமாக கெடுதல் நுழைந்து கொண்டே இருக்கும்.

எவ்வாறு இருக்க கூடாது

உதாரணத்திற்கு நிலை வாசல் சட்டம் பழுதடைந்து இருக்கிறது. நிலை வாசல் கதவு தாழ்ப்பால் போடும்போதும் திறக்கும் போதும், மூடும்போதும் சத்தம் கேட்பது.

நிலை வாசல் படியை துடைத்து மஞ்சள் குங்குமம் போட்டு வைக்காமல் பூ வைக்காமல் அப்படியே அதை கவனிக்காமல் விட்டு விட்டால் குடும்பத்திற்கு கஷ்டம் வரும்.

நிலை வாசலில் எந்த விஷயம் பழுதடைந்தாலும் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

குடியிருக்கும் தெய்வங்கள்

எதற்கு நிலை வாசலுக்கு இத்தனை முக்கியத்துவம். நிலை வாசல் படியில் தான் தெய்வங்கள் குடியிருக்கிறது. முன்னோர்கள் குடியிருக்கிறார்கள்.

வாஸ்து பகவானும் குடியிருக்கிறார். அப்படி இருக்கும்போது அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்க வேண்டும் அல்லவா. ஆகவே நிலை வாசலை எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

நிலை வாசலுக்கு மேல் பக்கத்தில் வெளியே பார்த்தவாறு சிறிய அளவில் கண்ணாடி வைக்கலாம். நிலை வாசலை போற்றும் வகையில் நெற்கதிரை வைப்பது மிகவும் நல்லது.

வீட்டிற்குள் செல்வ செழிப்பு ஈர்க்கப்படும். நெல் கதிர் கிடைக்கவில்லை என்றால் ஒரு கைப்பிடி அளவு நெல்லை மஞ்சள் துணியில் போட்டு கட்டி நிலை வாசலுக்கு வெளியே மாட்டி வைக்கலாம்.

நிலை வாசலில் மாவிலை கட்டுவது

இது அல்லாமல் வாரம் ஒரு முறை நிலை வாசலில் மாவிலை கட்டுவது வேப்பிலை வைப்பது போன்ற விஷயங்களை பின்பற்றி வர வேண்டும்.

ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை மஞ்சள் துணியில் கட்டி நிலை வாசலில் தொங்க விடுவது மிகவும் சிறப்பான ஒரு விஷயம்.

அப்படி இல்லை என்றால் ஒரு கயிற்றில் எலுமிச்சம் பழம் மிளகாய் இந்த இரண்டு பொருட்களையும் கோர்த்து நிலை வாசலில் கட்டி வைக்கலாம்.

இந்த பொருட்கள் எதுவுமே நிலை வாசலில் இல்லை என்றால் கெட்டது எந்த ஒரு தடையும் இல்லாமல் நிலை வாசலுக்குள் நுழைந்து விடும்.

வாசலில் பூஜை செய்வது

அதற்காகத்தான் நிலை வாசலில் கவனம் செலுத்துங்கள், நிலை வாசல் பூஜை செய்யுங்கள் என்று அத்தனை முறை வலியுறுத்தப்படுகிறது.

வீட்டில் இருப்பவர்கள் வெளியே சென்று அவர்களுடைய வேலையை நல்லபடியாக செய்து விட்டு மீண்டும் நல்லபடியாக வீடு திரும்ப வேண்டும் என்றால் தலைவாசல் பராமரிப்பு முக்கியம்.

Trending News

Latest News

You May Like