1. Home
  2. ஆன்மீகம்

இது தெரியுமா ? குழந்தைப் பாக்கியம் பெறுவதற்கு என்ன அபிஷேகம் செய்ய வேண்டும்..!

1

திருமணத்தடை, தொழிலில் தேக்கம், குழந்தைப்பேறு, நல்ல வேலை போன்றவற்றை வேண்டி பரிகாரம் செய்வதும் இறைவனிடமே..அப்படி கேட்டதுகிடைத்துவிட்டால் இறைவனை மகிழ்ச்சி படுத்தும் வகையில் பல்வேறு அபிஷேகங்களையும், ஆராதனைகளையும், தர்ம காரியங்களையும் முன்வந்து நடத்துகிறோம்.

பரிகாரங்கள் போலவே அபிஷேகங்களை செய்தும் இறைவனிட.ம் வேண்டியவற்றை கேட்பதும் உண்டு. ஆனால் அப்படி கேட்கும் போது நாம் வேண்டுவதற்கு ஏற்ப அதற்குரிய பொருளை அபிஷேகம் செய்யவேண்டும் என்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள்.

அபிஷேகங்களுக்குரிய பொருள்களையும், அதற்கான பலன்களையும் முன்னோர்களும் அறிந்துவைத்திருந்தார்கள். குறைகளுக்கேற்றவாறு உரிய அபிஷேகம் செய்து குறையை நிவர்த்தி செய்து கொண்டார்கள்.
பிரார்த்தனைக்குப் பிறகு செய்யும் அபிஷேகத்தை விட பிரார்த்திக்கும் போதே செய்யும் வழிபாடுக்கு பலன் நிச்சயமுண்டு. என்னென்ன திரவியங்கள் எந்தெந்த பலனைத் தரும் என்று பார்க்கலாம். மனம் அலைபாய்ந்து நிம்மதியின்றி தவித்தால் இறைவனுக்கு நெய் அபிஷேகம் செய்யுங்கள். மனம் குளிர்ந்து உங்கள் அமைதிக்கு அருள் புரிவார் இறைவன்.

இளநீரினால் அபிஷேகம் செய்தால் குடும்பத்தில் ஒற்றுமை தங்கும். உறவினர்களுடனான பிணக்குகள் தீர்ந்து அனைவரும் ஒருமித்து வாழ்வீர்கள். சுத்தமான பசும்பாலினால் அபிஷேகம் செய்தால் ஆயுள் நீடிக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் இருந்தால் நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்ய வேண்டும். கடனை அடைக்கமுடியாமல் சுமைகள் அதிகரித்தால் மாப்பொடியினால் அர்ச்சனை செய்வது நல்லது. கரும்புச்சாறினால் அபிஷேகம் செய்தால் பிணிகள் அகன்றுவிடும்.

மனதில் ஏற்படும் அச்சத்தை போக்க எலுமிச்சைச்சாறில் அபிஷேகம் செய்வது பலன் தரும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் தடையில்லா செல்வம் உண்டாகும். எட்டு விதமான செல்வங்களையும் அடையலாம். முக்கியமான வேண்டுதல் புத்திரபாக்கியம் என்பதுதான். இவர்கள் பசுந்தயிரால் அபிஷேகம் செய்தால் புத்திரபாக்கியம் பெறுவார்கள். அறிந்தும் அறியாமலும் செய்த அனைத்து பாவங்களும் நீங்க பஞ்சகவ்ய அபிஷேகம் கைமேல் பலன் தரும்.

வழிபாடுகளில் சிறந்தது அபிஷேக வழிபாடு என்கிறது ஜோதிட சாஸ்திரம். இறைவனிடம் வேண்டுதலை நிறைவேற்றினால் அபிஷேகம் செய்து பூஜைகள் தருகிறேன் என்று வழிபடுவதை விட தேவையை உணர்ந்து அபிஷேகம் செய்து வழிபடுங்கள். உங்கள் பிரார்த்தனைகள் கண்கூடாக நிறைவேறுவதைக் காணலாம். 

Trending News

Latest News

You May Like