இது தெரியுமா ? திதிகளும் அவற்றின் பலன்களும்..!
ஒரு மாதத்தில் சந்திரனின் 14 நாட்களில் வளர்பிறை திதியும், 14 நாட்கள் தேய்பிறை திதிகளும் ஏற்படுகிறது மீதம் 2 நாட்களில் ஒன்று அமாவாசை, மற்றொன்று பௌர்ணமி ஆகிறது. இப்படி மாறி வரும் திதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்களையும், எந்த திதியில் பிறந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் இந்த தொகுப்பில் படித்தறியலாம் வாங்க.
பிரதமை:
பிறந்த திதி பலன்கள்: இந்த திதியில் பிறந்தவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் செய்வதற்கு முன் பலமுறை யோசித்து செயல்படுவார்கள். பிரதமை திதியில் பிறந்தவர்கள் அம்பிகை கடவுளுக்கு நெய் படைத்து வணங்க வேண்டும்.
திதிக்கான தேவதை அக்னி பகவான். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் மகரம், துலாம். சிவனை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
துவிதியை:
பிறந்த திதி பலன்கள்: துவிதியை திதியில் பிறந்தவர்கள் நேர்மை குணம் கொண்டவர்களாகவும், உண்மையை மட்டும் பேசுபவர்களாக இருப்பார்கள். இந்த திதிக்கான கடவுள் பிரம்ம தேவன்.
கடவுளுக்கு சர்க்கரை படைத்து கடவுளை வழிபட வேண்டும். தனுசு, மீனம் ராசிக்காரர்கள் இந்த திதியில் கவனமாக இருக்க வேண்டும். இந்த திதியில் அம்பிகையை வழிபடுவது நல்லது.
திரிதியை:
திரிதியை திதியில் பிறந்தவர்கள் நினைத்த காரியத்தை நடத்தி முடிக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு செயலையும் பொறுமையுடன் செய்ய மாட்டார்கள்.
கல்வி மற்றும் கலைகளை இந்த திதியில் செய்யலாம். கவனமாக செயல்பட வேண்டிய ராசிக்காரர்கள் சிம்மம், மகரம். அம்மனை வழிப்பட்டால் நல்லது நடக்கும்.
சதுர்த்தி:
மந்திர சக்தியில் விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள். அதிக ஆசை கொண்டவர்களாகவும், தங்களின் உடமைகளை ரகசியமாக கையாளும் தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
எம தர்மன் இந்த திதியின் கடவுள். ரிஷப, கும்ப ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். நல்ல பலன்கள் கிடைக்க விநாயகரை வழிபட வேண்டும்.
பஞ்சமி:
பிறந்த திதி பலன்கள்: பொன் ஆசை உடையவர்களாகவும், புத்திசாலியாகவும், நீண்ட நாள் வாழக்கூடிய ஆயுளை பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த திதியின் கடவுள் நாகம். மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். நாக தோஷம் தீர பஞ்சமி திதியில் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.
சஷ்டி திதி:
சஷ்டியில் பிறந்தவர்கள் செல்வந்தர்களாகவும், அதிக ஆற்றல் உடையவர்களாகவும், மற்றவர்களை எளிதில் கவரக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த திதியின் கடவுள் முருகன். சஷ்டி திதியில் மேஷம், சிம்மம் ராசிக்காரர்கள் கவனமாக இருக்கவும். புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சஷ்டியில் முருகனுக்கு விரதம் இருந்து வழிபடுவது நல்லது.
சப்தமி திதி:
மற்றவர்களின் மேல் இரக்க குணம் உடையவர்களாக இருப்பார்கள். நல்ல குணங்கள் நிறைந்தவர்களாகவும், மற்றவர்களை மதிக்க தெரிந்தவர்களாகவும் இருப்பார்கள். இந்த திதியின் கடவுள் சூரிய பகவான்.
கடக ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த திதியில் நாராயணரை வழிபடுவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.
அஷ்டமி திதி:
பிறந்த திதி பலன்கள்: இந்த திதியில் பிறந்தவர்கள் நன்கு பேசக்கூடிய தன்மையையும், மனைவியின் பேச்சை கேட்டு நடப்பவர்களாகவும், குழந்தைகளிள் மேல் மிகவும் அன்பு உடையவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த திதிக்கான கடவுள் சிவ பெருமான். கன்னி மற்றும் மிதுன ராசிக்காரர்கள் இந்த திதியில் கிருஷ்ண பரமாத்மாவை வழிபடுவது நல்லது.
நவமி திதி:
புகழ் பெறுவதில் நாட்டம் உடையவர்கள். தன்னம்பிக்கை அதிகம் உடையவராகவும், கலைகளை ஆர்வமுடன் செய்பவராகவும் இருப்பார்கள்.
இந்த திதிக்கான தேவதை துர்கை அம்மன். நவமி திதியில் சிம்ம, விருச்சிக ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஸ்ரீ ராம பிரானை வழிப்பட்டால் நல்லது நடக்கும்.
தசமி திதி:
புத்திசாலியாகவும், தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கும் தன்மை உடையவர்களாகவும், ஒழுக்கம் உடையாராகவும் இருப்பார்கள்.
எமதர்மன் இந்த திதிக்கான கடவுள் ஆவார். சிம்மம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் இந்த திதியில் தேவியை வழிபட்டால் நல்லது நடக்கும்.
ஏகாதசி திதி:
ஏகாதசியில் பிறந்தவர்கள், பொருள் ஈட்டுவதில் இவர்களின் எண்ணம் இருக்கும். பெண்கள் மீது அதிக ஆசை உடையவர்களாகவும் இருப்பார்கள்.
ஏகாதசி திதிக்கான கடவுள் ருத்திரன். இந்த திதியில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட தனுசு ராசிக்காரர்கள் பெருமாளை வழிபட வேண்டும்.
துவாதசி திதி:
துவாதசியில் பிறந்தவர்கள், புதுமையான தொழில் செய்வதில் அதிக ஆர்வம் உடையவர்களாகவும், செல்வந்தவர்களாகவும் இருப்பார்கள். திதியின் தேவதை விஷ்ணு.
துவாதசி அன்று பிறந்தவர்கள் முருகனை வணங்குவது நல்லது. மகரம், துலாம் ராசிக்காரர்கள் இந்த திதியில் கவனமாக இருக்கவும்.
திரயோதசி திதி பலன்:
பிறந்த திதி பலன்கள்: திரயோதசியில் பிறந்தவர்கள் அமைதியான குணம் கொண்டவர்கள். நல்லவர்கள் அவர்களை சூழ்ந்து இருப்பார்கள். ரிஷபம், கும்பம் ராசிக்காரர்கள் கவனமுடன் இருக்கவும். சிவனை வழிபட வேண்டும்.
சதுர்தசி திதி:
இந்த திதியில் பிறந்தவர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மேலும் தாங்கள் நினைத்த காரியத்தை முடிக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த திதியின் கடவுள் காளியம்மன். இந்த திதியில் ஏற்படும் சங்கடங்கள் நீங்க பைரவரை வழிபடவும். இந்த திதியில் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ராசிக்காரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
பௌர்ணமி, அமாவாசை:
பிறந்த திதி பலன்கள்: பௌர்ணமியில் பிறந்தவர்கள், நல்ல சிந்தனை உடையவர்கள். அமாவாசையில் பிறந்தவர்கள், தன் அறிவை மேம்படுத்தி கொள்பவர்களாக இருப்பார்கள். பௌர்ணமி/ அமாவாசை அன்று பிறந்தவர்கள் அம்மனை வழிபட வேண்டும்.