இது தெரியுமா ? இதை அணிபவர்களுக்கு அகால மரணம் ஏற்படாது..!
1 முதல் 21 வரையிலான் முகம் கொண்ட ருத்ராட்சையில் 5 முகம் கொண்ட ருத்ராட்சையைப் பற்றி அறிவோமா?
ஐம்புலன்கள், ஐவிரல்கள் அனைத்தையும் அடக்கும் பொருட்டு ஐந்துமுக ருத்ராட்சம் அணிவதற்கும் மிகச்சிறந்ததாக கருதப்படுகிறது.
சகலமானவர்களும் அணிவதற்கேற்ற ஐந்துமுக ருத்ராட்சம் எனப்படும் பஞ்சமுக ருத்ராட்சம் காலாக்னி என்றழைக்கப்படுகிறது. பரமசிவனின் ஐந்துமுகங்களான சத்யோஜாதம்,வாமதேவம், அகோரம்,தத்புருஷம், ஈசானம் இதற்கு அதிதேவதைகள். 5 முதல்60% வரை 5 முக ருத்ராட்சமே உற்பத்தியாகிறது. இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம் சிவனின் ஆசிர்வாதிக்கப்பட்ட ருத்ராட்சம் என்று நம்பப்படுகிறது. நவக்கிரகங்களில் குருபகவானின் கட்டுப்பாட்டில் இயங்கும் ருத்ராட்சம் என்பதால் இது தேவகுரு என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த பஞ்சமுக ருத்ராட்சத்தை அணிவதற்கு உரிய வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே அவர் செய்த பாவங்கள் நீங்கிவிடுகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த ருத்ராட்சத்தை கழுத்தில் அணிவதுதான் நல்லது. அணிவதற்கு முன்பு சிவன் கோயிலில் ருத்ராட்சை பூஜை செய்வது அவசியம். ருத்ராட்சைய அதற்குரிய சுப முகூர்த்த நாளில் அணிந்துகொள்ளுங்கள். பஞ்சமுக ருத்ராட்சம் கீழே விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மற்ற எல்லா முக ருத்ராட்சங்களில் கிடைக்கும் பலன்கள் இவை ஒன்றிலேயே கிடைத்துவிடும். இந்த ருத்ராட்சமாலையை தியானத்திலும் பயன்படுத்துவார்கள்.
இந்த ஐந்து முக ருத்ராட்ச மாலையை அணிவோர் எத்தகைய சூழ்நிலையிலும் அமைதியான மனநிலையைப் பெறுவார்கள். பொறுமையுடனும் பக்குவத்துடனும் செயல்படுவார்கள். புத்திக்கூர்மை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு கல்வியில் முன்னேற்றம் அதிகரிக்கும். திறமை பளிச்சிடும். ருத்ராட்ச மாலை இதயத்தில் தவழச் செய்யும்போது இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். இதய நோய்கள் வராமல் தடுக்கும். இதை அணிபவர்களுக்கு அகால மரணம் ஏற்படாது என்பது சிவபக்தர்களின் ஆகச் சிறந்த நம்பிக்கையும் கூட... ஐந்து முக ருத்ராட்சகத்துக்கான மந்திரம் - ஓம் ஹரீம் நமஹ..
அடுத்த பாகத்தில் ருத்ராட்சகத்தின் பிற முகங்களைப் பார்க்கலாம்.