இது தெரியுமா ? காகம் உங்கள் வீட்டை பார்த்து கரைவதற்கு இது தான் காரணம்..!

காக்கை ஆனது சனிபகவானின் வாகனம் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக காக்கை கருப்பு நிறத்தில் இருப்பதால் அதை யாருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் இந்த காகத்தை நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து அதிகமாக வணங்கி வரும் ஒரு பறவையாகவும் இருக்கிறது. பொதுவாக அமாவாசை அன்று காக்கைக்கு உணவளிப்பது இறந்து போனவர்களுக்காக உணவளிப்பது இறந்து போனவர்களுக்காக உணவளிப்பது என்று சொல்லப்படுகிறது. இப்படி நாம் தெய்வமாக வணங்கி வரும் காகம் உங்கள் வீட்டில் கரைவதற்கு காரணம் என்னவென்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.
நீங்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் காக்கை உங்கள் வீட்டை பார்த்து கரைந்து கொண்டே இருக்கும். நாம் அதை துரத்தினாலும் மறுபடியும் வந்து கரையும், இதை சில பேர் உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வரப்போகிறார்கள் என்று கேலியாகவும் சொல்வார்கள்.
பொதுவாக காக்கைக்கு என்ன நடக்க போகிறது, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று நன்றாகவே தெரியும். நாம் பொதுவாக ஒரு காக்கைக்கு சாதம் வைத்தால் அது தனியாக சாப்பிடாமல் ஒரு கூட்டத்தையே அழைத்துக்கொண்டு வரும் அப்படிப்பட்ட காகம் உங்களுடைய வீட்டை பார்த்து கரைவதற்கு காரணம் என்ன தெரியுமா.? காக்கை உங்கள் வீட்டை பார்த்து கரைவதற்கு அவசியம் உங்கள் வீட்டில் ஒரு நன்மை நடக்க போகிறது என்று உணர்த்துகிறது. இதுபோல் உங்கள் வீட்டை பார்த்து கரையும் காக்கைக்கு ஒரு கைப்பிடி அளவு சாதம் வையுங்கள்.
நீங்கள் வெளி இடங்களுக்கு செல்லும் பொழுது ஒரு சில நேரங்களில் உங்களுடைய தலையிலோ, முதுகிலோ காக்கை எச்சம் செய்துவிடும், அப்போழுது யாராக இருந்தாலும் அதிகமான கோவம் வரும், காக்கை எச்சம் போட்டால் உங்களுக்கு ஏதோ கெட்ட சகுனம் நடக்க போகிறது என்று உணர்த்துகிறது. இதனால் தான் உங்கள் மீது எச்சம் செய்து, அந்த கெட்ட சகுனத்தில் இருந்து விலகுவதற்காக உங்களை தாமதிக்க வைக்கிறது.
பூக்கள், பழங்கள் அல்லது ரத்தினக் கற்களை ஒரு வீட்டில் காகம் இட, அந்த வீட்டில் ஆண் குழந்தை பிறக்கும். கூடு கட்ட உபயோகிக்கும் புல், குச்சி போன்றவற்றைக் கொண்டு போட்டால், பெண்மகவு பிறக்கும். மணல், நெல் போன்ற தானிய வகைகள், ஈரமான மண், பூக்கள், காய்கனிகள் கொண்டு வந்து வீட்டில் போட்டால், அந்தந்தப் பொருளின் வகையில் லாபம் ஏற்படும். வீட்டிலுள்ள பாத்திரங்களைக் காகம் எடுத்துப் போவது நன்மையன்று.
சூரியனைப் பார்த்து காகம் கரைந்தாலும், சிவந்த பொருட்கள், சிவந்த மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து வீட்டினுள் போட்டாலும், நெருப்பினால் துன்பம் நேரிடும். காகம் மிகவும் அமைதியாக உட்கார்ந்து கிழக்கு திசை பார்த்துக் கரைந்தால் அரசாங்க ஆதரவு, நண்பர் சேர்க்கை, தங்கத்தால் லாபம், நல்ல உணவு கிடைக்கும்.
பால் உள்ள மரங்கள் மற்றும் ஆற்றங்கரை களில் இருந்துகொண்டு மழைக்காலங்களில் காகம் கரைவது, நல்ல மழை உண்டு என்பதற்கான சகுனம். மற்ற காலங்களில் இவ்வாறு காகம் கரைந்தால், மழை மேகங்கள் மட்டுமே வந்துபோகும்; மழை வராது!
நீர் நிலைகளைப் பார்த்துக் காகம் கரைவதும், மணல் புழுதி அல்லது தண்ணீரில் காகம் தன் தலையை மூழ்கச் செய்வதும் நல்ல மழைக்கான அறிகுறிகளாகும். மற்ற காலங்களில் இவ்வாறு செய்வது தீது!
காகமும் திசைகளும்:
தென்கிழக்கு: இந்தத் திசை நோக்கிக் காகம் கரைந்தால், தங்கம் சேரும்.
தெற்கு: உளுந்து, கொள்ளு போன்ற தானிய லாபமும், இசை யில் புலமையும் அமையும். சங்கீத வித்வானின் நட்பு கிடைக்கும்.
தென்மேற்கு: நல்ல தகவல் வரும். குதிரை, தயிர், எண்ணெய், உணவு போன்றவை சேரும்.
மேற்கு: மாமிச உணவு, மது வகைகள், நெல் முதலான தானியங் கள், முத்து, பவளம் போன்று கடலில் விளையும் பொருட்கள், உலர்ந்த பழ வகைகள் கிடைக்கும்.
வடமேற்கு: ஆயுதங்கள், கொடியில் விளையும் பழங்கள், கிடைக்கும். உலோகங்களால் லாபம் ஏற்படும்.
வடக்கு: ஆடைகள், நல்ல உணவு ஆகியன கிடைக்கும். வாகனங்கள் சேரும்.
வடகிழக்கு: நல்ல தின்பண்டங்கள், பொதி சுமக்கும் எருது, பொதி சுமக்கும் வாகனங்கள் சேரும். வீட்டின் கூரை மீது அமர்ந்து