இது தெரியுமா ? செவ்வாய் கிழமையில் இந்த மந்திரத்தை 27 முறை ஜபித்து வர...

சிவனாரின் நெற்றியில் இருந்து ஒரு துளி நீர் பூமியில் விழுந்தது. அந்த நீர்த்துளியே மங்களன் என்றும் அவனை பூமாதேவி வளர்த்தாள் என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மங்களன், சிவனாரை நோக்கி கடும் தவம் புரிந்தான். அதன் பலனாக, மங்களனின் தேகத்தில் இருந்து யோகாக்கினி கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும் அவனுடைய தவத்தால், நவக்கிரகங்களில் ஒருவனானான். செவ்வாய் கிரகமாக மட்டுமின்றி அங்காரகன் எனும் பெயரில், செவ்வாய் தோஷங்களை நீக்கும் சக்தியைப் பெற்றான்.
அங்காரக தெய்வமான செவ்வாய் பகவான், தன்னை யாரெல்லாம் வணங்குகிறார்களோ அவர்களின் கோரிக்கைகள் மற்றும் செவ்வாய் முதலான தோஷங்கள் அனைத்தும் நீங்க செய்வான். அங்காரகனின் வாகனம் ஆடு. எனவே,செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் பலமின்றி இருப்பவர்கள், ஆடுகளுக்கு உணவிடலாம்.
செவ்வாய் பகவானின் அருளை பெற மூலமந்திரம்
அங்காரகன்ஐம் ஹ்மெளம் ஸீம்த்ராம் கம்
க்ரஹாதிபதயே பெளமாய ஸ்வாஹா
செவ்வாய் கிழமையில் நவகிரக சன்னதியில் இருக்கும் செவ்வாய் பகவானுக்கு செந்நிறப்பூக்களை மாலையாக தொடுத்து, விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும்.
1008 முறை அச்சன்னதியை சுற்றி வர ஜாதகத்தில் இருக்கும் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும். அதேசமயம் வீடு, நிலம், போன்ற சொத்துக்களை வாங்க செவ்வாய் பகவான் வழிவகுப்பார்.