1. Home
  2. ஆன்மீகம்

இது தெரியுமா ? பகைவர்களால் ஏவப்பட்ட பில்லி,சூனியம் தகர்க்க இவரை வணங்கினால் போதும்..!

1

திருமால் காக்கும் தெய்வம். அவர் திருக்கையில் எதற்கு சங்கும் சக்கரமும்?. திருமாலின் கையில் இருக்கும் சக்கரம் யார். திருமால் சக்கரம் வைத்திருப்பதன் தாத்பரியம் என்ன என்பது தெரியுமா?

மகாவிஷ்ணுவின் கைகளில் இருக்கும் ஆயுதமான ஸ்ரீ சக்கரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.தன் அடியவர்கள் துயர் பொறுக்காதவன் அந்த மாலவன்.அதனால் தன் பக்தர்களுக்கு தீங்கு நேரும் போதெல்லாம் ,பகைவர்களை அழிக்கும் ஆயுதமாக அவரின் சக்கரமாகிய  சக்கரத்தாழ்வார் விளங்குகிறார் .

மாதவனுக்குப் பல பெயர்கள் இருப்பது போல்,அவர் கையில் இருக்கும் சக்கரமாகிய சக்கரத்தாழ்வாருக்கு ஸ்ரீ சுதர்சனர் ,ஸ்ரீ சக்கரம் ,திகிரி ,ஸ்ரீ சக்கரம் ,திருவாழியாழ்வான் எனும்திருநாமங்கள் உண்டு .ஸ்ரீ சுதர்சனர் என்றால்,நல்வழி காட்டுபவர் என்று பொருள் .

திருமாலின் திருமேனியை எப்போதும் தாங்கிக்கொண்டிருக்கும் ஆதிசேஷனை அனந்தாழ்வான் என்றும், அவரை சுமந்து செல்லும் வாகனமான கருடனை கருடாழ்வார் என்றும், நம்மாழ்வார்  ஞானம் பெற்ற புளியமரத்தை திருப்புளியாழ்வான் என்றும், மகாவிஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்களில் முதன்மையானதும், சிறப்புமிக்கதுமான சக்கரத்தை சக்கரத்தாழ்வான் எனவும் வைணவ சாஸ்திரங்கள் போற்றிக் கொண்டாடுகின்றன. ‘சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’ என்று பெருமாளுடன் சேர்த்து,அவரது சக்கரத்திற்கும் சேர்த்தே பெருமை சேர்க்கிறார்ஆண்டாள்.

விஷ்ணு ஆலயங்களில்,ஸ்ரீ சக்கரத்தாழ்வார் முன் புறத்திலும்,யோக நரசிம்மர் பின் புறத்திலும் கட்சிக் கொடுப்பார்கள். 8 அல்லது 16 திருக்கரங்களுடன் அறுகோண சக்கரத்தில் உக்கிர வடிவ சுதர்சனரும், ‘திரிகோண சக்கரம்’ எனும் முக்கோணத்தில் யோக நரசிம்மரும் அருள்பாலிக்கின்றனர்.

சக்கரத்தாழ்வாருக்கு உகந்த  வியாழன் மற்றும் சனிக்கிழமை.

சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றிவைத்து, சிவப்பு மலர்களால் மாலை சூட்டி,மனமுருகி "ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம " என்று சொன்னால் கிரக தோஷம் விரைவில் நீங்கி விடும் .மேலும் சனி கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை அணிவித்து,அர்ச்சனை செய்து,அவரை  12, 24, 48 முறை வலம் வந்து வழிபட்டால் மனதில் எண்ணிய பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் தடையில்லாமல்  நிறைவேறும் என்பது நம்பிக்கை.

துன்பத்தில் இருந்து விடுபட்டு உடனடியாக நற்பலன் உண்டாக சக்கரத்தாழ்வாரையும் , நரசிம்மரையும் ஒருசேர வழிபடுவது சிறப்பு எனப்படுகிறது.இதன் அடிப்படையில் தான் கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சந்நிதி எழுப்புவர்.

சக்கரத்தாழ்வாரை வணங்கிட நம்மை சூழ்ந்திருக்கும் துன்பங்கள், தடை எல்லாம் விலகி நல்வழி கிடைக்கும் என்பது நம்பிக்கை.சக்கரத்தாழ்வாரை வழிப்பட்டால் நினைத்த காரியம் ஈடேறி, வெற்றி கிட்டும். மன அமைதியின்மை,செய்யும் தொழிலில் நிலையற்ற தன்மை,கெட்ட கனவு,எதிர்மறை எண்ணங்கள், பகைவர்களால் ஏவப்பட்ட பில்லி,சூனியம்,ஏவல்,உடல் நலம் சரியில்லாமல் சித்தபிரமை,புத்தி சுவாதீனம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள்,மதுரையில் உள்ள  திருமோகூர் காளமேகப் பெருமாள் திருக்கோயிலில்  வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வாரை வணங்கினால் பிரச்சனைகளையும்,துன்பங்களையும் தீர்த்து வைப்பார் .

‘நாளை என்பது நரசிம்மனுக்கு கிடையாது’ என்று குறிப்பிடுவர்.அப்படியென்றால் அவரிடம் அபயம் என்று போய் நின்றால்,அடுத்த கணமே நம்மை நம் இடர்களில் இருந்து காத்தருள்வார். திருமாலின் பக்தர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால்,அது அந்த பெருமாளுக்கே ஏற்பட்ட இடையூறாக  கருதி விரைந்து காப்பவர் சக்கரத்தாழ்வார்.

நாம் அவரை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்,நம்முடைய வளமான வாழ்க்கையை நோக்கி நாம் எடுத்து வைக்கும் வெற்றிப் படிகளாகும்.

Trending News

Latest News

You May Like