இது தெரியுமா ? காளை மாட்டினை கனவில் கண்டால்...
ஒருவர் உறக்கத்தில் இருக்கும் போது அவரை எதிர்காலம், கடந்த காலம், நிகழ்காலம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்து ஒரு கருவியாக கனவுகள் உள்ளன. வெற்றி - தோல்வி, அழுகை - சிரிப்பு, பிரியமானவர்கள் - வேண்டாதவர்கள், உணவு, காடு, விலங்குகள், இடங்கள் உள்ளிட்ட எது வேண்டுமானாலும் கனவில் வரும். இவற்றிற்கு வரையறை என்பது கிடையாது. பொதுவாக கனவுகள் ஏதோ ஒன்றை நமக்கு உணர்த்துவதற்காக அல்லது எச்சரிப்பதற்காக தான் வருகின்றன என சொல்லப்படுகிறது.
எறும்புகளை கனவில் கண்டால் நீங்கள் கடின முயற்சி எடுத்து உழைக்கும் விஷயத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று அர்த்தம். உங்கள் உழைப்பின் முழு பலனையும் நீங்கள் விரைவில் அடைய போகிறீர்கள் என்ரு அர்த்தம்.
காளை மாட்டினை கனவில் கண்டால் உங்களின் அழகு, வசீகரம், பலம் அதிகரிக்க போகிறது என்று அர்த்தம். உங்களின் செல்வ வளம் உயர போகிறது என்பதற்கான அறிகுறியாகும். ஆண்களின் கனவில் காளை மாடு வந்தால் உங்கள் வாழ்வில் காதல் மலர போகிறது என்று அர்த்தம். அதுவே பெண்களின் கனவில் காளை மாடு வந்தால் பெரும் மனக்கஷ்டம், மன அழுத்தத்தை சந்திக்க போவதாக அர்த்தம்.
முதலையை கனவில் கண்டால் பெரும் துன்பம் வரப் போகிறது என்று அர்த்தம். முதலை உங்களை தாக்குவதாக கனவு கண்டால் பெரும் சிக்கல்கள் வரப் போகிறது என்பதற்காவ அறிகுறியாகும். முதலையை விட நீங்கள் பலசாலியாக இருந்து அதனுடன் சண்டையிடுவது போல் கனவு கண்டால் வரப் போகும் பிரச்சனைகளை நீங்கள் தவிடுபொட்டியாக்கி விடுவீர்கள் என்று அர்த்தம்.
வெளவ்வாலை கனவில் கண்டால் அது பயத்தை குறிப்பதாகும். வெளவ்வால் உங்களை தாக்குவதாக கனவு கண்டால் நீங்கள் பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
வண்டுகளை கனவில் கண்டாலோ அல்லது 6 முதல் 8 கால்களை கொண்ட பூச்சிகளை கனவில் கண்டாலோ பல மடங்கு அதிகமான பிரச்சனைகள் உங்கள் வாழ்வில் வரப் போகிறது என்று அர்த்தம். நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தேனீக்கள் உங்கள் கனவில் வந்தால் உங்கள் வீட்டை தேடி சில மகிழ்ச்சியான விஷயங்கள் வரப் போகிறது என்று அர்த்தம். அதிர்ஷ்டம், நல்ல செய்தி உங்களைத் தேடி வரப் போகிறது என்று அர்த்தம்.
- கனவில் வெற்று பாத்திரங்களைப் கண்டால் நீங்கள் விரைவில் பணக்காரராகப் போகிறீர்கள் என்பதாகும்.
- உங்கள் கனவுகளில் ஒரு எலியை கண்டால், திடீரென்று பணம் வரும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். கனவில் எலியை பார்த்தால் ஏழ்மை விலகும் என கூறப்படுகிறது.
- உப்பை கனவில் கண்டால் பணம், பொருள் நிறைய சேர போகிறது என்று அர்த்தம்.
- வெல்லம் தின்பது போல கனவு கண்டால் வீட்டில் வறுமை உண்டாகும்.
- தயிர் சாப்பிடுவது போல கனவு கண்டால் வீட்டில் லக்ஷ்மி கடாஷம் உண்டாக போகிறது என்று பொருள்.
- பந்தியில் அமர்ந்து சாப்பிடுவது போல கனவு வந்தால் பொருள் வரவு உண்டாகும்.
- விருந்தில் உண்பது போல் கனவு கண்டால் திருமண தடை நீங்கும், உத்தியோக உயர்வு கிடைக்கும்.
- இறைச்சி சாப்பிடுவது போல கனவு கண்டால் வியாதிகள் ஏற்படும் என்று பொருள்.
- மீன் இறந்து கிடப்பது போன்றோ கருவாட்டையோ கனவில் கண்டால் பகைவர்களின் தொல்லை ஏற்படும்.
- அரிசி சாதத்தை சாப்பிடுவது போல கனவு கண்டால் வியாதிகள் ஏற்படும் என்று அர்த்தம்.
- அரிசியைக் கனவில் கண்டால், செய்யும் தொழில் அபிவிருத்தி அடையும்; லாபம் அதிகரிக்கும்
- காரமான பொருட்களை சாப்பிடுவது போல கனவு கண்டால் உங்கள் உழைப்பிற்கு தகுந்த ஊதியம் கிடைக்கும் என்று பொருள்.
- டீ குடிப்பது போல கனவு கண்டால் பிரிந்த நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று பொருள்.
- காப்பி குடிப்பது போல கனவு கண்டால் சுப செய்தி வரபோகிறது என்று அர்த்தம்.
- கோதுமை, அரிசி இவைகளை கனவில் கண்டால் செல்வ விருத்தி ஏற்படும் என்று அர்த்தம்.
- கோழி முட்டையை கனவில் கண்டால் தொழில் மற்றும் விருத்தி ஏற்படும் என்று அர்த்தம்.
- முட்டை சாப்பிடுவது போல் கனவு வந்தால் வறுமை உண்டாகும்.
- பருப்புகளை கனவில் கண்டால் பகைவர்கள் உங்களை விட்டு விலகி ஓடுவார்கள் என்று அர்த்தம்.
- புளிப்பான உணவுகளை சாப்பிடுவது போல கனவு கண்டால் நம்மை பிடித்த துன்பங்கள் விலகும் என்று அர்த்தம்.
- பட்டாணியை கனவில் காண்பது வீட்டில் மங்கள காரியங்கள் நடைபெற போவதன் அறிகுறியாகும்.
- ரொட்டி சாப்பிடுவது போல கனவு கண்டால் வீட்டில் வறுமை வந்து சேரும்.
- சூடான பொருட்களை சாப்பிடுவது போல கனவு கண்டால் நம்முடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற போகிறது என்று அர்த்தம்.
- ஜாம் சாப்பிடுவது போல கனவு கண்டால் நல்ல காரியங்கள் நடைபெற போவதன் அறிகுறியாகும்.
- பாயசம் சாப்பிடுவது போல கனவு கண்டால் நன்மைகள் பல உண்டு.
- பால் குடிப்பது போல கனவு கண்டால் செல்வம் சேரும்.
- இஞ்சியை கனவில் கண்டால், நோய்களால் பாதிப்பு ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
- இனிப்புகளை கனவில் கண்டால் மிகவும் நல்லது. வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.
- ஏலக்காயைக் கனவில் கண்டால் பிறரால் மதிக்கப் பெறும் நிலையை அடைவீர்கள்.
- ஏலக்காயை சாப்பிடுவது போல கனவு கண்டால், மிகுந்த செல்வம் வந்து சேரும் என்று அர்த்தம்.