1. Home
  2. ஆன்மீகம்

இது தெரியுமா ? வெள்ளை அரிசி கொண்டு நைவேத்தியம் செய்வதால்...

1

தெய்வங்களை வழிபடும்போது இறைவனுக்கு ஒரு நைவேத்தியம் செய்வது வழக்கம். இந்த வரிசையில் பக்தர்கள் பலவிதமான நைவேத்தியம் தயார் செய்து இறைவனை வழிபடுகின்றனர்.

வெள்ளை அரிசி இறைவனுக்கு நைவேத்தியம்  செய்து பிறகு அதை கால்நடைகளுக்கு வழங்குவதால், நம் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்பட்டு லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

மேலும் வெள்ளை அரிசியில் தேன் சேர்த்து இறைவனுக்கு நைவேத்தியம் சமர்ப்பணம் செய்பவர்கள் எந்த விதமான நோய் நொடிகளும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

வெள்ளை அரிசியுடன் கொண்டைக்கடலை சேர்த்து பாயாசம் செய்து குல தெய்வத்திற்கு நைவேத்தியம் சமர்ப்பணம் செய்தால் வீட்டில் எந்த வகையான கருத்து வேறுபாடு இல்லாமல், மன அமைதியுடன் மகிழ்ச்சியுடன் குடும்பம் இருக்கும்.

மேலும் சனி தோஷம் உள்ளவர்கள் சனீஸ்வரருக்கு எள் கலந்த வெள்ளை சாதம் பிரசாதமாக சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல் காக்கைகளுக்கு வெள்ளை அரிசி கொண்டு நெய்வேதியம் செய்து கொடுப்பதன் மூலம் சனி தோஷம் நீங்குவது மட்டுமின்றி பித்ருக்களின் சாபங்களும் நீங்கும்.

வெள்ளை சாதம் கொண்டு சிவலிங்கம் தயாரித்து பின்பு அதனை நைவேத்தியம்  செய்து ஆற்றில் விடுவதன் மூலம் நம் வீட்டில் செல்வத்திற்கு பஞ்சம் வராது.

இவ்வாறு வெள்ளை சாதத்தைக் கொண்டு நம் இஷ்ட தெய்வங்களை வணங்குவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் என அறிஞர்கள் கூறுகின்றனர்.

Trending News

Latest News

You May Like