இது தெரியுமா ? திருமணம் பந்தத்தில் நுழையும் பெண்ணுக்கு இத்தனைக் குணங்களும் இருக்க வேண்டுமாம்..!

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் ‘தமிழர் திருமணம்’ என்கிற புத்தகத்தில், பதினோராம் நூற்றாண்டில் தான் திருமணச் சின்னம் என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப்பட்டது என்கிற செய்தியை அறிந்துக் கொள்ள முடிகிறது.
மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது. திருமாங்கல்யத்தின் ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது. தெய்வீகக் குணம், தூய்மைக் குணம், மேன்மை, தொண்டு, தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல் என திருமண வாழ்க்கையில் நுழையப் போகும் பெண்ணுக்கு இத்தனைக் குணங்களும் இருக்க வேண்டும் என்பதே இதன் தாத்பரியம்.