மக்களே இது தெரியுமா ? தாம்பத்யத்திற்கு இந்த பொருத்தம் ரொம்ப முக்கியம்..!!
யோனி என்பது புணர்ச்சி உறுப்புகளைக்குறிக்கும். தாம்பத்திய உறவில் ஈடுபடும் ஆண்,பெண் இருவருக்குமிடையே எந்த அளவிற்கு மன ஒற்றுமை, உடல் ஒற்றுமை இருக்கும் என்பதை கண்டறிய இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது. மனித யோனிகளின் தன்மைகளை மிருக யோனிகளின் தன்மையோடு ஒப்பிட்டு கூறியிருக்கிறர்கள் ரிஷிகள்.
தாம்பத்திய உறவில் ஈடுபடும் மனிதனின் எண்ணம்மற்றும் செயல்பாடுகள் அவர்களுடைய ஜென்ம நட்சத்திரத்திற்குரிய மிருகத்தின் செயல்பாடுகளை ஒத்திருக்கும் என்பது ரிஷிகளின் கருத்தாகும்.
தாம்பத்திய உறவில் ஈடுபடும் மனிதனின் எண்ணம்மற்றும் செயல்பாடுகள் அவர்களுடைய ஜென்ம நட்சத்திரத்திற்குரிய மிருகத்தின் செயல்பாடுகளை ஒத்திருக்கும் என்பது ரிஷிகளின் கருத்தாகும்.
அதாவது நமது ஜோதிடம் சாஸ்த்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரத்திர்க்கும் ஒவ்வொரு மிருகங்களின் குணம் இருக்கிறது. திருமணம் செய்து கொள்ளும் ஆண் மற்றும் பெண் நட்சத்திரத்தில் மிருகங்களுக்கு இடையே பகை இருந்தால் பொருந்தாது. பகை என்பது திருமணம் செய்து கொள்பவர்களின் திருமண வாழ்க்கையானது நன்றாக இருக்காது. திருமண வாழ்க்கை இனிமையானதாக அமைய இருவருக்கும் இடையில் அன்னியோன்யம் இருக்க வேண்டும். இதன் காரணமாக தான் திருமணம் பொருத்தத்தில் இந்த யோனி பொருத்தம் பார்க்கப்படுகிறது. சரி இப்பொழுது ஆண், பெண் நட்சத்திரங்களில் பகை உள்ள நட்சத்திரம் எது? பகை இல்லாத நட்சத்திரம் எது? என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்து தெரிந்து கொள்வோம்.
அசுவினி – ஆண் குதிரை
பரணி – ஆண் யானை
கார்த்திகை – பெண் ஆடு
ரோகிணி – ஆண் நாகம்
மிருகசீரிஷம் – பெண் சாரை
திருவாதிரை – ஆண் நாய்
புனர்பூசம் – பெண் பூனை
பூசம் – ஆண் ஆடு
ஆயில்யம் – ஆண் பூனை
மகம் – ஆண் எலி
பூரம் – பெண் எலி
உத்தரம் – எருது
அஸ்தம் – பெண் எருமை
சித்திரை – ஆண் புலி
சுவாதி – ஆண் எருமை
விசாகம் – பெண் புலி
அனுஷம் – பெண் மான்
கேட்டை – கலைமான்
மூலம் – பெண் நாய்
பூராடம் – ஆண் குரங்கு
உத்திராடம் – மலட்டு பசு (சில பஞ்சாங்கங்களில் கீரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
திருவோணம் – பெண் குரங்கு
அவிட்டம் – பெண் சிங்கம்
சதயம் – பெண் குதிரை
பூரட்டாதி – ஆண் சிங்கம்
உத்திரட்டாதி – பாற்பசு
ரேவதி – பெண் யானை
பகையுள்ள யோனிகள்:
பாம்பு x கீரி
யானை x சிங்கம்
குரங்கு x ஆடு
மான் x நாய்
எலி x பூனை
குதிரை x எருமை
பசு x புலி
இந்த பகை உள்ள ஆண் பெண் நட்சத்திரங்கள் சேர்க்கக் கூடாது இவற்றில், பொருத்தம் இல்லாதவை என்று சொல்லலாம். இதனை ஜென்ம விரோதிகள் என்று கூறுவார்கள்.
மேல் கூறப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உள்ள மிருகம் குணத்தை தெரிந்திருப்பீர்கள். அதில் எதை எதனோடு இணைத்தால் திருமணம் வாழ்க்கை நன்றாக அமையும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். தாவர உண்ணிகள், தாவர உண்ணிகளோடு சேரும், மாமிசபட்சினிகள், மாமிசபட்சினிகளோடு சேரலாம். அதேசமயம், நாய்க்கு பூனை பகை. சிங்கம், புலிக்கு பசு, எருது, மான், ஆடு, குதிரை யானை பகை. பாம்புக்கு எலி பகை. எலிக்கு, கீரி பகை. குரங்குக்கு, ஆடு பகை.
திருமணம் பொருத்தம் பார்க்கும் பொழுது,
🔯தினம் பொருத்தம்,
🔯கணம் பொருத்தம்,
🔯யோனி பொருத்தம்,
🔯ராசி பொருத்தம் அல்லது மகேந்திர பொருத்தம்
🔯ரஜ்ஜூ பொருத்தம்
ஆகிய ஐந்து பொருத்தங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என சோதிடம் கூறுகிறது.
இந்த 5 அடிப்படை பொருத்தங்கள் இல்லாமல் இருந்தால் திருமணம் செய்து வைப்பது சிறந்ததாக இருக்காது.
பழைய நாட்களில் திருமண பொருத்தம் என்பது 20 பொருத்தங்களை பார்ப்பதாக இருந்தது.
அதன் பின், அது 11 ஆக குறுகியது.
தற்பொழுது நாம் 10 பொருத்தங்கள் பார்க்கிறோம்.