துளசி செடியை வலம் வரும்போது இந்த மந்திரத்தை உச்சரித்தால் நல்ல பலன் கிடைக்கும்..!
துளசியின் மருத்துவ குணம் மற்றும் அதன் மகத்துவம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காகத் தான், நாம் பெருமாள் கோயில், அனுமன் கோயிலுக்கு இறைவழிபாடு செய்ய செல்லும் போது அங்கு வழங்கப்படுகிறது.
துளசி மாடம் அமைக்க வேண்டிய இடம் :
சூரிய ஒளி விழுகின்ற இடத்தில் கிழக்கு பக்கம் பார்த்தவாறு வாசலுக்கு நேராக துளசி மாடம் அமைக்க வேண்டும் என்பது ஆச்சாரியரின் போதனை. நம் வீட்டு தரையை விட தாழ்வான மட்டத்தில் இல்லாமல், சற்று உயரமான இடத்தில் துளசி செடியை அமைப்பது அவசியம்.
வீட்டில் துளசி செடி வைத்து வளர்த்தால் மட்டும் போதாது. அதனை தினமும் தீபம் ஏற்றி வழிபடுவதோடு, மூன்று முறை வலம் வர வேண்டும்.
துளசி செடியை வலம் வரும்போது அதற்குரிய மந்திரத்தை உச்சரித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
துளசியை வலம் வரும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:
‘பிரசீத துளசி தேவி
பிரசீத ஹரி வல்லயே
க்ஷீ ரோதமத நோத்புதே
துளசி த்வாம் நமாம்யகம்’
துளசியைப் பறிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
‘துளஸ்வமுத சம்பூதா
சதா த்வம் கேசவப்ரியே
கேச வார்த்தம் லுனமி த்வாம்
வரதா பவ சோபனே’
மாலை நேரத்திலும், ஏகாதேசி அன்றும், செவ்வாய்க் கிழமை அன்றும், வெள்ளிக் கிழமை அன்றும், துளசி இலைகளை தயவுசெய்து பறிக்காதீர்கள்.