சிறுவாபுரி முருகனை செவ்வாய்க்கிழமை தோறும் வழங்கிய இந்த 108 போற்றி பாடலை கூறுவதன் மூலம்...

சிறுவாபுரி முருகன் 108 போற்றிகள்:-
- அகத்திய முனிக்கொரு தமிழ்த்ரயம் உரைத்தவா போற்றி
- அடியார் சித்தத்து இருக்கும் முருகா போற்றி
- அடி அந்தமிலா அயில் வேல் அரசே போற்றி
- அடியார் இடைஞ்சல் களைவோனே போற்றி
- அடியார் இருவினைத் தொகையறுப்பாய் போற்றி
- அடியார்கள் பங்கில் வருதேவே போற்றி
- அத்தா நிருத்தா அரத்த ஆடையா போற்றி
- அந்தண் மறை வேள்வி காவற்கார போற்றி
- அமராவதி புரக்கும் ஆனைக்கு இறைவா போற்றி
- அமருலகிறைவ உமைதரு புதல்வ போற்றி
- அரிய மோன விழிதிறந்த நளின பாதம் போற்றி
- அலகில் தமிழால் உயர் சமர்த்தனே போற்றி
- அறு சமய சாத்திரப் பொருளோனே போற்றி
- அறிவுடன் ஓது மாதவர் பெருவாழ்வே போற்றி
- அறிவும் உரமும் அறமும் நிறமும் உடையாய் போற்றி
- அறிவிற் பெரிய மேன்மைக்கார போற்றி
- அன்பர் மகிழ வரங்களும் அருள்வாய் போற்றி
- ஆதி அந்தமுமான சங்கரி குமரேசா போற்றி
- ஆதி முடிவு அற்ற திரு நாமக்கார போற்றி
- ஆயிர முகத்து நதி பாலா போற்றி
- ஆறுதிருப்பதியில் வளர் பெருமாள் போற்றி
- இன்சொல் விசாகா க்ருபாகர போற்றி
- இணையில் அருணை பழநி கிழவ போற்றி
- இமயவரை ஈன்ற மங்கைக்கு ஒருபாலா போற்றி
- உக்ர இறையவர் புதல்வா முதல்வா போற்றி
- உமையாள் பயந்த இலஞ்சியமே போற்றி
- உலகு அளவு மால் மகிழ்ந்த மருகா போற்றி
- எந்தனுடைச் சாமிநாதா வயலூரா போற்றி
- எழுதா மறைமா முடிவே வடிவே போற்றி
- என்றும் அகலாத இளமைக்கார போற்றி
- ஒருகால் முருகவேள் எனவும் அருள்தாராய் போற்றி
- கசிவார் இதயத் தமிர்தே போற்றி
- கடம்ப மலர் முடிக்கும் இளையோனே போற்றி
- கரிமுகவன் இளைய கந்தப் பெருமான் போற்றி
- கருதுவார் மனம் புகுந்த பெருமாளே போற்றி
- கர்பர் கயிலாயர் மைந்த வடிவேலா போற்றி
- கவுரி நாயகனார் குரு நாயக போற்றி
- குருபுங்கவ எண்குண பஞ்சரனே போற்றி
- குன்றுருவ ஏவும் வேலைக்கார போற்றி
- குமர குர கார்த்திகைப் பெருமாளே போற்றி
- குவடு தவிடு படக் குத்திய காங்கேயா போற்றி
- குறமகள் தார்வேய்ந்த புயனே போற்றி
- குறமகளைவந்தித்து அணைவோனே போற்றி
- சகல வேதமுமே தொழு சமரபுரிப் பெருமாள் போற்றி
- சரவணத்திற் பிறந்த ஒரு கந்தசுவாமியே போற்றி
- சம்பந்தன் எனத் தமிழ் தேக்கிய பெருமான் போற்றி
- சிந்தாலத்தை அடர் சுந்தா போற்றி
- சலைகள் உருவிட அயிலைவிடு குமர போற்றி
- சிவகாம சுந்தரியே தரு பாலக போற்றி
- சூர்மா மடியத் தொடுவேலவனே போற்றி
- செஞ்சொல் அடியார்கள் வாரக்கார போற்றி
- செஞ் சேவற், செங்கையுடைய சண்முகா போற்றி
- செந்தமிழ் சொல் நாலு கவிதைக்கார போற்றி
- செந்தமிழ் நூல் விரித்த செவ்வேள் போற்றி
- செவ்வான் உருவில் திகழ் வேலவா போற்றி
- சேலார் வயல் பொழில் செங்கோடைக்குமர போற்றி
- செயே வேளே பூவே கோவே போற்றி
- சோதி கார்த்திகை பெற்றவிளக்கொளி போற்றி
- ஞானகர சுர பாஸ்கரனே போற்றி
- தமிழ் சோதித்து அலங்கல் அணி அத்தா போற்றி
- தமிழ்தனை கரை காட்டிய திறலோனே போற்றி
- திரியம்பகி அளித்த செல்வச் சிறுவா போற்றி
- திங்கள் சூடிய நாயகர் பெருவாழ்வே போற்றி
- திருக்குராவடி நிழல் தனில் உறைவோய் போற்றி
- திருந்த வேதம் தண்தமிழ் தெரிதருபுலவ போற்றி
- திருமக சந்தர முருக கடம்ப சிவசுத போற்றி
- திருநடனம் இடு மயிலில் வரு குமர போற்றி
- திமிர தினகர முருக சரவணபவ போற்றி
- திறல் பூண்ட சுப்ரமண்ய ஷண்முகவேலா போற்றி
- தீர தீர தீராதி தீரப் பெரியோனே போற்றி
- தேவ தேவ தேவாதி தேவப் பெருமாள் போற்றி
- தூவிக்குல மயில் வாகனனே போற்றி
- தெரிவை பாரதியர் சாதியிலாதவர் தரசேய் போற்றி
- தெய்வ வாரண வநிதை புநிதா போற்றி
- தொழுது வழிபடும் அடியர் காவற்கார போற்றி
- நக்கீரர் சரண் என வந்தருள் முருக போற்றி
- நீலக்ரிப கலாபத் தேர்விடு சேவகா போற்றி
- நீர் பெருஞ் சடையாரருள் தேசிகா போற்றி
- நிதியே நித்தியமே என் நினைவே போற்றி
- நினைத்ததை முடித்தருள் கிருபைக் கடல் போற்றி
- பச்சை மாமயில் மெச்ச ஏறிய பாகா போற்றி
- பரமற்கு அருமறை உபசேதித்த தேசிகா போற்றி
- பரமகல்யாணி தந்த பெருவாழ்வே போற்றி
- பல குன்றிலும் அமர்ந்த பெருமாள் போற்றி
- பொன்பரவு கதிர்வீசு வடிவேலா போற்றி
- மகாமாயை களைந்திட வல்லபிரான் போற்றி
- மஞ்சரி குஞ்சரி தோய் காங்கேயா போற்றி
- மணம் அறாத கடம்பு பனைவோய் போற்றி
- மதுமலர்க் கண் துயில் முகுந்தன் மருகா போற்றி
- மந்தாகினி தந்த வரோதயனே போற்றி
- மயில் கொண்டு உலகு நொடியில் வருவாய் போற்றி
- மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி மன்னா போற்றி
- மறவாதவர் நினைப்பவை முடிப்பவா போற்றி
- மாநிலம் எழினும் மேலான நாயக போற்றி
- முத்தமிழை ஆயும் வரிசைக்கார போற்றி
- மைவருங் கண்டத்தர் மைந்தா போற்றி
- வடிவும் இளமையும் வளமையுமுடையாய் போற்றி
- வாசக அதீத மனோலய பஞ்சுரா போற்றி
- வாசுகி எடுத்துதவும் வாசிக்காரா போற்றி
- வாவியில் உதித்த முகமாயக்காரா போற்றி
- வாகை புனை குக்குட பதாகைக் கார போற்றி
- வேடர் குலப் பிடிதோய்மலையே போற்றி
- வேதாள கணம் புகழ் வேலவனே போற்றி
- வை வைத்த வேற்படை வானவனே ேபாற்றி
- வேத ஆகம சித்ர வேலாயுதனே போற்றி
- வேலும் மயிலும் நினைந்தவர் துயர்தீர அருள்வாய் போற்றி
- சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான தண் சிறுவை தனில் மேவும் பெருமான் போற்றி போற்றி
- வளம் மிகுந்த சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமான் போற்றி போற்றி