அஸ்வினி,பரணி,கார்த்திகை,ரோகிணி,மிருகசீரிஷம்,திருவாதிரை,புனர்பூசம் நட்சத்திரத்திற்குரிய தொழில்..!
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஞானம் மற்றும் அளவிட முடியாத ஆற்றல் உடையவர்கள்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி அஸ்வினி நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள்.
- வாகன வர்த்தகம்
- வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளி, வாகன ஓட்டுநர் பயிற்சியாளர்கள், போக்குவரத்து துறை,ஆர்.டி.ஓ அலுவலகம் சம்பந்தப்பட்ட வேலை.
- அனைத்து வகையான மருத்துவர்கள், மருத்துவம் படிக்கவிட்டாலும் மருத்துவ அறிவு அதாவது ஒரு நோயை குணப்படுத்தும் அறிவு இருக்கும்.
- வேதியியல் துறை, (ஆசிரியர,லேப் அசிஸ்டன்ட், கெமிக்கல் இன்ஜினியரிங் ), தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் (மினரல் வாட்டர் பிளானட்)
- ஊக்கமளிக்கும் பயிற்சியாளர்கள் (மென்டார்), ஆலோசகர்கள்.
- விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான வேலைகள்(உடற்கல்வி ஆசிரியர், விளையாட்டு பயிற்சியாளர்கள், விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பவர்கள்)
- சாகச விளையாட்டு, ஸ்டண்ட் மேன், நடனம்
- காவல்துறை, இராணுவ வீரர்கள்.
- கட்டிடத் தொழில், கான்க்ரீட் போடுபவர்கள்
- இயந்திர மேலாளர்கள், பொறியியல் சம்பந்தப்பட்ட துறை.
பரணி நட்சத்திரத்திற்குரிய தொழில்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நிர்வாக திறமை கொண்டவர்கள்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி அஸ்வினி நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள்.
- அலுவலக மேலாளர்கள்
- குழந்தை பராமரிப்பாளர், குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்பவர் அல்லது விற்பவர், மகப்பேறு மருத்துவர்கள்.
- மகளிர் மருத்துவம்
- மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் உள்ள பணிகள் (முக்கியமாக பதிவாளர் பணி)
- தேயிலை தொழில், டீ கடை , ஹோட்டல் உரிமையாளர், இறைச்சி விற்பனை , சமையல்காரர்கள்
- கால்நடை மருத்துவர்கள்
- திரைத்துறை(திரைப்படம், இசைத் துறை) பொழுதுபோக்கு சாதனங்கள் விற்பனை
- உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல்
- உரம் மற்றும் விதை விற்பனை
- நீதிபதிகள்
- அமானுஷ்ய நிபுணர்கள்
கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய தொழில்
கார்த்திகை நட்சத்திரம் மேஷ ராசியில் 26°40"-இல் இருந்து ரிஷப ராசியில் 10° 00 வரையிலும் உள்ளது. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் தாங்கள் செய்யும் காரியங்களை திறம்படச் செய்யக்கூடியவர்கள்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி அஸ்வினி நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள்.
- பைனான்ஸ், வங்கிப் பணிகள்
- பாத்திரங்கள் உற்பத்தி மற்றும் பாத்திர வியாபாரம்
- விமர்சகர்கள்
- இராணுவ ஜெனரல், மேலாளர்கள்
- நகைக்கடை, கண்ணாடி தயாரிப்பாளர்கள் மற்றும் கண்ணாடிகள் விற்பவர்கள்.
- கத்திகள், அரிவாள், அரிவாள்மனை போன்ற கூர்மையான ஆயுதங்கள் உற்பத்தி
- சிகையலங்கார நிபுணர்,முடி திருத்துபவர்,மேக் அப் நிபுணர்
- தையல்காரர்கள் , எம்பிராய்டிங்
- வீடு கட்டுவதற்கு தேவையான கட்டுமானப் பொருட்கள் விற்பனை
- நெருப்பை பயன்படுத்தி செய்யக் கூடிய தொழில்கள்.
ரோகிணி நட்சத்திரத்திற்குரிய தொழில்
ரோகிணி நட்சத்திரத்தில் தான் சந்திரன் உச்சம் பெறுவார்.பேச்சு சாதுர்யம் மிக்க ரோகிணி நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி காண்போம். சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி அஸ்வினி நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள்.
- விவசாயம், அனைத்து வகையான விவசாய தொழில் செய்பவர்கள்.
- உணவு பதப்படுத்தும் துறை
- அறிவியல் ஆசிரியர்
- வணிகம், டிரேடிங், கனிம வர்த்தகம்
- பைலட், கப்பல் போக்குவரத்தில் உள்ள பணிகள்
- ஜவுளிக்கடை
- ஃபேஷன், அழகு நிலையம்
- பேக்கேஜிங் மற்றும் விநியோகம்
- நிதி ஆலோசகர்
- பூக்கடை
- பாடலாசிரியர், கவிஞர் , பாட்டு பாடுதல்.
- டிரைவர் (மிகப்பெரிய பணக்காரர், மந்திரி, கலெக்டர் போன்ற அதிகாரிகளுக்கு டிரைவராக பணிபுரிபவர்கள்)
- மீன் விற்பனை(கடல் வாழ் பொருட்கள் அனைத்தும்)
- ஆடை வடிவமைப்பாளர்
- நடனம் மற்றும் இசை
மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்குரிய தொழில்
மிருகசீரிஷம் நட்சத்திரம் ரிஷபம் மற்றும் மிதுனம் இராசிகளில் வரும். மொழி இனப்பற்று அதிகம் உடைய மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி காண்போம்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி அஸ்வினி நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள்.
- மென்பொருள் பொறியாளர்
- அனைத்து வகையான இசைக் கலைஞர்கள்
- மொழி ஆராய்ச்சி செய்பவர்கள்
- நாவலாசிரியர், கதை ஆசிரியர்
- செல்லப்பிராணி விற்பனை (பூனை, நாய்)
- ஃபேஷன் டிசைனர்
- ரியல் எஸ்டேட்
- ஜவுளி கடை
- அலுவலக உதவியாளர்
- சுற்றுலா அழைத்துச் செல்லும் தொழில்
- மனோதத்துவ நிபுணர்கள்
- சிவில் நீதிபதிகள்
- பத்திர பதிவுத்துறை
- பெண்கள் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை (வளையல், அழகு சாதனப் பொருட்கள் விற்பனை)
- நிலம் சம்பந்தப்பட்ட தொழில்
திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய தொழில்
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சோடை(சோடை என்றால் பருப்பு இல்லாமல் வெறும் கூடாக இருக்கும் கடலை) போனதில்லை என்று கூறுகிறது ஜாதக அலங்கார நூல். திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி இங்கு காண்போம். சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி அஸ்வினி நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களுடன் தங்களுக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வார்கள்.
- மின் பொறியாளர்,எலக்ட்ரீசியன், மின்னணு மற்றும் கணினி தொழில்
- போட்டோகிராபர், போட்டோ ஸ்டுடியோ மற்றும் பிளக்ஸ் டிசைனிங்
- பர்னிச்சர் விற்பனை
- வழக்கறிஞர்கள்
- அரசியல்வாதிகள்
- ஜெராக்ஸ் கடை
- காவல்துறை
- செல்போன், கணினி விற்பனை
- ஆயுத தொழிற்சாலைகளில் வேலை
- நகைச்சுவை நடிகர்கள்
- ஒலிபெருக்கி,ரேடியோ செட்
- திருமண மண்டபம்
- எழுத்தாளர்கள்
- உயிரியல் ஆசிரியர்
- ஜோதிடர்கள்
புனர்பூசம் நட்சத்திரத்திற்குரிய தொழில்
புணர்பூசம் நட்சத்திரம் மிதுனம் மற்றும் கடக ராசியில் வரும்.படைப்பாற்றல் மிக்க புனர்பூசம் நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி காண்போம்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி அஸ்வினி நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களுடன் தங்களுக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வார்கள்.
- கணித ஆசிரியர்
- வங்கி மேலாளர்
- ஆடம்பர பொருட்கள் விற்பனை
- ஹோமியோபதி மருத்துவம்
- ஹோட்டல் மற்றும் உணவக தொழில்
- ஆசிரியர்கள்
- ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
- சிவில் இன்ஜினியர்கள்
- ஆன்மீக ஆசிரியர்கள்
- கோவில்கள் மற்றும் தேவாலயங்கள் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை
- விமானிகள் மற்றும் விண்வெளி வீரர்கள்.
- நடிப்பு மற்றும் பொழுதுபோக்கு வேலை